Skip to main content

கேரளா: "பொன்னு மோளே நீ சாக மாட்டாய்" - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் ஆன் ஜான். ஷெரின் ஆன் ஜான் ஆசிரியையாக உள்ளார். இவர்களது ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம்.

ஆலின் ஷெரின் ஆபிரகாம் பிறந்து 10 மாதமே ஆகிறது. ஷெரின் ஆன் ஜான் பட்டம் பெறும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கோட்டயத்துக்குச் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி காரில் வீடு திரும்பினர். அப்போது இவர்கள் பயணித்த கார் திடீரென மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்தது. குழந்தையின் தாய் ஷெரின் ஆன் ஜான் மற்றும் குழந்தையின் தாய்வழி தாத்தா ராஜன் ஜான், பாட்டி ஜெசி ஜான் ஆகியோரும் காயம் அடைந்தனர். அனைவரும் திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. குழந்தையின் தாய் உள்ளிட்டோர் திருவல்லா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சிகிச்சைக்கு இடையே கடந்த 13-ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதைத்தொடர்ந்து 10 மாதமே ஆன குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடல் உறுப்புகளைத் தானம்செய்ய அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதற்கான நடவடிக்கைகளை குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் செய்தார்.

குழந்தையின் உடல் உறுப்பு தானம்
குழந்தையின் உடல் உறுப்பு தானம்

குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாத குழந்தைக்கு கல்லீரல் தானம் செய்யப்பட்டது.

இரண்டு சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைக்கு வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 குழந்தைகள் வாழ்வுபெறும் எனக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்த குழந்தை இதுவாகும். உறுப்பு தானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'பொன்னு மோளே நீ மரணமடையமாட்டாய், வேறு குழந்தைகளின் உடலில் வாழ்வாய்' எனக் கேரள மக்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

உறுப்புதானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம்
உறுப்புதானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம்

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்து மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரிய குழந்தையை இழந்த வேதனை இருந்தபோதிலும், ஆலினின் பெற்றோர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்தனர்.

ஆலின் ஷெரின் ஆபிரகாம் மூலம் 5 பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும். குழந்தையிடம் பெறப்பட்ட உறுப்புகள் முதற்கட்டமாக 2 குழந்தைகளுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மகத்தான முயற்சியை வெற்றிபெறச் செய்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது.

உடல் உறுப்பு தானத்தில் ஆலின் ஷெரினின் பெற்றோர் கேரள சமூகத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். அவர்களின் துயரத்திலும், இந்த ஊர் மக்களின் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...