Doctor Vikatan: திரைப்படங்களிலும் சரி, நமக்குத் தெரிந்தவர்கள் சொல்லும்போதும் சரி, மாரடைப்பு வந்தவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, 'மேஜர் அட்டாக்' என்றோ, 'நல்லவேளை மைனர் அட்டாக்...' என்றோ சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ஹார்ட் அட்டாக் என்றால் ஒன்றுதானே... அதென்ன மேஜர் அட்டாக், மைனர் அட்டாக்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் மேஜர் ஹார்ட் அட்டாக்கில், இதயத்துக்குப் போகும் ரத்தக் குழாயில் முழுமையான அடைப்பு, அதாவது 100 சதவிகிதம் அடைப்பு இருக்கும். அதன் காரணமாக அந்த அடைப்பைத் தாண்டி ரத்தம் போகாது. மைனர் ஹார்ட் அட்டாக்கிலும் இதயத்துக்குப் போகும் ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கும். ஆனால், அது 100 சதவிகிதம் இருக்காது. ரத்தம் போவதை முழுமையாக அடைத்திருக்காது. மேஜர் ஹார்ட் அட்டாக்கின்போது இசிஜி எடுத்துப் பார்த்தால், இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாகத் தெரியும். நெஞ்சுவலி எனச் சொல்வோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, ...