Skip to main content

Doctor Vikatan: இளவயதில் அடிக்கடி ஸ்ட்ரெஸ்; பிற்காலத்தில் மறதிக்கு வழிவகுக்குமா?

Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமே ஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.  50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் குறைவது போன்றவை சீக்கிரமே பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா? மூளையை ஆக்டிவ்வாக வைத்திருக்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி

ப்ரித்திகா சாரி
ப்ரித்திகா சாரி

ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தைப் பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம்.

அதை 'ஸ்ட்ரெஸ்ஃபிட்' என்கிறோம். அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும்  ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும்.

ஸ்ட்ரெஸ் அதிகமானால் சிந்தனை தொடங்கி, செரிமானம், இதய நலன் என எல்லாமே அதனால் பாதிக்கப்படும். பிற்காலத்தில் ஏற்படும் மறதிக்கும் அது காரணமாகலாம்.

மூளையின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது கொழுப்புச்சத்து. சிலர், அதீத ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பார்கள். அது மூளைக்கு நல்லதில்லை. நல்ல கொழுப்பாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதுதான் இதில் முக்கியமே.

அப்படிப் பார்த்தால் மீன், பாதாம் பருப்பு, அவகாடோ பழம்,  தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு இருக்கிறது. கொழுப்பே இல்லாத உணவுப்பழக்கத்தால் மூளையில் பாதிப்புகள் ஏற்படும்.

மூளை 75 சதவிகிதம் நீரால் ஆனது. நம்மில் பலரும் செய்கிற தவறு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். ஆனால், பலரும் அந்த அளவுகூட குடிப்பதில்லை. அதுவும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். 

உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் திறன் மேம்படும். மூளைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜன் உள்ள ரத்தம் போய்ச் சேரும்

உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறன் மேம்படும். மூளைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜன் உள்ள ரத்தம் போய்ச் சேரும். உடற்பயிற்சி செய்யும்போது 'பிரெய்ன் டிரைவ்டு நியூரோட்ராபிக் ஃபேக்டர்' என்ற பொருள் விடுவிக்கப்படும்.

அது ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நரம்பு செல்களைப் பழுது பார்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் உதவும். தூக்கமின்மை என்பது மெள்ள மெள்ள மூளையின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.

இளவயதில் தூக்கத்தின் அருமை தெரியாமல், அதைத் தவிர்ப்பவர்களுக்கு 60 ப்ளஸ் வயதில் அதன் விளைவு தெரியவரும். எனவே, இளவயதிலேயே இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், வயதான பிறகு மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். 

நெகட்டிவ் சிந்தனைகளைத் தவிர்ப்பது, பாசிட்டிவ்வான அணுகுமுறை, எதிலும் கெட்டது தவிர்த்து நல்லதைப் பார்ப்பது, நன்றியோடு இருப்பது போன்ற குணங்களின் மூலம் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டியது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...