Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக அவனுக்கு நெற்றியில், முகத்தில், தாடையில் எல்லாம் பருக்கள் வருகின்றன. அவன் முகம் கழுவியதும் சில நிமிடங்களுக்கு முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால், அது அரை மணி நேரம்கூட நீடிப்பதில்லை. எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னை, 'செபோரிக் டெர்மடைடிஸ்' (Seborrheic dermatitis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செபோரியா என்பது நம் உடல் உற்பத்தி செய்யும் ஒருவித எண்ணெய். இந்த எண்ணெய் நம் உடலில் அதிகமாகச் சுரப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவுப் பழக்கவழக்கங்கள் (அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்), உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடியில் எண்ணெய் வைக்கும் பழக்கம் என இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதுதான் இந்த எண்ணெய்ச் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதன் விளைவாக முக...