Doctor Vikatan: இன்று சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயென்ஸர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாகவும் அதுதான் அவர்களது இளமைத் தோற்றத்துக்கான காரணம் என்றும் சொல்வதைப் பார்க்கிறோம். அதே சமயம், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் பீட்ரூட் என்பது சத்துகள் நிறைந்த காய்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை யார் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரையறை தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து மிக அதிகம் என்பதால், அது உடலில் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படும். அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும். அதனால் இதயநலன் மேம்படும். மூளையின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. பீட்ரூட்டிற்கு அந்த அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது 'பீட்டலைன்' (Betalain) என்ற சத்து. இது வெறும் நிறமி மட்டுமல்ல, நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்க...