Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் இந்தக் கேள்விக்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், விக்கல் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதிலிருந்து அது முதியவராகும்வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம். நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும். பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும். உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும். விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவ...