எப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வெகு சிலர் மட்டுமே சூப் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பின் மருத்துவப்பலன்கள் குறித்து சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். சூப் எலும்பு சூப் வெஜிடபிள் சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், ஹெர்பல் சூப்... எனப் பலவிதமான சூப் வகைகள் இருந்தாலும், எலும்பு சூப் தரும் பலன்கள் சிறப்பானவை. சிக்கன் மற்றும் மீன் எலும்புகளின் சூப் மருத்துவக் குணங்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்பு சூப் ஊட்டச்சத்து நிறைந்தது; எளிதில் செரிமானமாகக்கூடியது. மூட்டுகளைப் பாதுகாக்கும் உடலால் எளிதாக உறிஞ்சப்படக்கூடிய நிலையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் போன்ற கனிமங்கள் எலும்பு சூப்பில் உள்ளன. மூட்டுவலியைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் கான்ட்ராய்டின் சல்பேட் (Chondroitin sulfate) மற்றும் குளுக்கோசமைன் (Glucosamine) ஆகியவை எலும்ப...