Doctor Vikatan: விரதம் இருப்பது என்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லது செய்யுமா அல்லது உடலை பலவீனமாக்குமா? விரதமிருப்பதால் உடல் டீடாக்ஸ் செய்யப்படும் என்பது உண்மையா? விரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும்போது எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி விரதமிருப்பது என்பது நிச்சயம் உடலை டீடாக்ஸ் செய்யும் விஷயம்தான். 15 நாள்களுக்கொரு முறை விரதமிருக்கலாம். அவரவர் வயது, உடலுழைப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து விரதமிருக்கும் நேரத்தை, தன்மையைத் தேர்ந்தெடுக்கலாம். Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு? இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம். விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லத...