Skip to main content

Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? - எல்லோரும் குடிக்கலாமா?

Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன.  கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது என்கிறார்கள் இன்னும் சிலர். கற்றாழைச் சாற்றை எல்லோரும், தினமும் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

கற்றாழைச் சாறு குடிப்பது உண்மையில் ஆரோக்கியமானதுதான். ஆனால், அதைச் சரியாக, முறையாகச் செய்து குடிக்கிறோமா என்பதுதான் இதில் முக்கியம். கடைகளில் வாங்கிக் குடிப்பதானால், அது சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்த பிறகு குடிக்க வேண்டும்.

கற்றாழையின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சோற்றுப் பகுதியை எடுக்க வேண்டும். அந்தச் சோற்றுப் பகுதியை ஓடுகின்ற குழாய் நீரில் (running tap water) நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், அதிலிருந்து வடியும் ஒருவித பால் போன்ற திரவம் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது.  கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம். 

கற்றாழைச் சாறு பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பல. குறிப்பாக, அது வயிற்றுப் புண்களை ஆற்றும், மூல நோய் மற்றும் மலச்சிக்கல் (constipation) பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாகும். 

கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம்.

பெண்களுக்கு பிசிஓடி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பால்  பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி இருக்கும்.  ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்ய கற்றாழை உதவும். ஆண்மையை அதிகரிக்கும் என்பதால், ஆண்களின் பாலியல் ஆரோக்கியம்  மேம்படும்.  உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மைக்கும் இது உதவுகிறது.

வயிற்றுப்புண், வாய்ப்புண், பௌத்திரம் மற்றும் மூட்டுவலி போன்ற வீக்கம் சம்பந்தப்பட்ட (inflammatory conditions) அனைத்துப் பிரச்னைகளுக்கும் கற்றாழைச் சாறு நல்லது.
கற்றாழை மிகவும் குளிர்ச்சித்தன்மை உடையது. எனவே, சளி, சைனஸ் (sinusitis) மற்றும் ஆஸ்துமா போன்ற கபம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் கற்றாழைச் சாற்றைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...