Skip to main content

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

மஞ்சள் காமாலை என்று நாம் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்கிறோம். உண்மையில் 'காமாலை' என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பாட்டின் மீது விருப்பம் இருக்காது. இந்த நோயும் அதையே பிரதிபலிக்கிறது.

கல்லீரல் பாதிப்படையும்போது தோன்றும் முதல் அறிகுறியாக, பசியின்மை ஏற்படும். வாயில் கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வது, எதைப் பார்த்தாலும் பிடிக்காத உணர்வு, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிளும் தோன்றும்.

தவிர, ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும்போது, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதையும் சேர்த்துதான் இதற்கு மஞ்சள் காமாலை என்று பெயர் வந்தது.

கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இந்தப் பாதிப்பை, மருத்துவர்கள், 'எல்எஃப்டி' என்ற பரிசோதனையின் மூலம் உறுதிசெய்வார்கள். மஞ்சள் காமாலையின் பல அறிகுறிகளில் இதுவும் ஒன்று. 

கல்லீரல்
கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இந்த பாதிப்பை, மருத்துவர்கள், 'எல்எஃப்டி' என்ற பரிசோதனையின் மூலம் உறுதிசெய்வார்கள்.

மஞ்சள் காமாலை ஏற்பட வேறு சில காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஹெப்படைட்டிஸ்  (Hepatitis)  ஏ, பி, சி, டி மற்றும் இ போன்ற வைரஸ் தொற்றுகள், அதிக மது அருந்தும் பழக்கம், சிரோசிஸ் (Cirrhosis)  எனப்படும் கல்லீரல் வீக்கம், ஆட்டோ இம்யூன் நிலைகளால் ஏற்படும் பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை கற்கள் பித்த நாள அடைப்பு என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.

மஞ்சள் காமாலை என்பது உறுதிசெய்யப்பட்டால், சித்த மருத்துவர்கள், பத்திய உணவுகளைக் கட்டாயம் வலியுறுத்துவார்கள். கல்லீரல் என்பது உடலின் மெட்டபாலிசம் மற்றும் நச்சு நீக்கத்திற்கு (Detox) மிக முக்கியமான உறுப்பு.

பசி, செரிமானம், கழிவு வெளியேற்றம் என எல்லாவிதமான ஹார்மோன் தொடர்பான செயல்பாடுகளுக்கும் கல்லீரல்தான் பிரதானம். கல்லீரல் அழுத்தத்தில் இருக்கும்போது அதற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், அதிக காரம், உப்பு மற்றும் சர்க்கரை, அசைவ உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், விருந்து சாப்பாடு போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது. 

எந்தக் காரணத்தால் மஞ்சள் காமாலை வந்திருந்தாலும் அதிலிருந்து குணமாகி, கல்லீரல் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை, குறைந்தது 2-3 வாரங்களுக்காவது பத்திய உணவுகளைப் பின்பற்ற அறிவுறுத்துவோம்.

அதனால்தான் மஞ்சள் காமாலை பாதித்தால், எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், ஆப்பம், கல் தோசை, புளிப்பு ஏறாத உணவுகள், புழுங்கல் அரிசி கஞ்சி அல்லது பாசிப்பருப்பு சேர்த்துக் குழைய வேகவைத்த கிச்சடி (எண்ணெய் இல்லாமல்), காரம் மற்றும் உப்பு குறைவாக வீட்டிலேயே செய்த காய்கறி சூப், புளிப்பில்லாத மோர் சாதம் மற்றும் பருப்புத் தண்ணீர் ரசம் போன்றவை சிறந்தவை.

கீழாநெல்லி: சாறாக இருந்தால் 30 மில்லி அல்லது அரைத்த விழுதாக இருந்தால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் உப்பில்லாத மோரில் கலந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க வேண்டும்.

வழக்கமாக நம் உணவில் 8 கிராமுக்கு மேல் உப்பு இருக்கும். மஞ்சள் காமாலை பாதித்தவர்கள், ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மருத்துவர் அறிவுறுத்தினால் ஒழிய உப்பை முழுமையாகத் தவிர்க்கவும் கூடாது. நிறைய தண்ணீர் குடித்து, சிறுநீரை வெளியேற்றும்போது, அதிகப்படியான பிலிருபின் வெளியேறி, சிறுநீரின் நிறம் இயல்பாக மாறும். வெளிறிய நிறத்தில் வெளியேறிக் கொண்டிருந்த மலமும் இயல்பாக மாறும்.

உணவுமுறையோடு சேர்த்து, கீழாநெல்லி மற்றும் கரிசலாங்கண்ணி  இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து அரைக்க வேண்டும். சாறாக இருந்தால் 30 மில்லி அல்லது அரைத்த விழுதாக இருந்தால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் உப்பில்லாத மோரில் கலந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க வேண்டும். இது காமாலை பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும். கல்லீரல் இயல்புநிலைக்குத் திரும்ப பொதுவாக 2 முதல் 3 வாரங்கள் ஆகும். இருப்பினும், குறைந்தது 6 வாரங்கள் வரை பத்தியத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...