Skip to main content

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் Microgreens: ஆரோக்கியத்தை அள்ளித் தருமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்.... எதில் தயாரிக்கிறார்கள்... யாருக்கு நல்லது?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்
கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்

மைக்ரோ கிரீன்ஸ் என்பவை காய்கறி அல்லது கீரை வகைகளின் மிக இளம்நிலை. அதாவது, செடிகள் வளரத் தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே, அவற்றின் இலைகள் மிகவும் மென்மையாகவும் லேசாகவும் இருக்கும்போதே நாம் அவற்றை அறுவடை செய்து பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் யாரும் இவற்றை சமைத்துச் சாப்பிடுவதில்லை. சாலட் அல்லது சூப் போன்றவற்றில்  பச்சையாகச் சேர்த்துச் சாப்பிடலாம்.

மைக்ரோ கிரீன்ஸ் ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகியவை அதிக அளவில் உள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. பைட்டோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். தவிர, இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸை அதிகரிக்க உதவுகின்றன.

மைக்ரோ கிரீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL Cholesterol) குறைக்க உதவுகிறது. உணவில் நார்ச்சத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மைக்ரோ கிரீன்ஸ் மிகச் சிறந்த தேர்வு. வைட்டமின் சி சத்து அதிகம் என்பதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. மிகக் குறைந்த கலோரிகளே கொண்டவை என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் ஏற்றதாக இருக்கின்றன. 

பல வகையான விதைகள் மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி மைக்ரோ கிரீன்ஸை வளர்க்கலாம். புரொக்கோலி, முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, கொத்தமல்லி, பட்டாணி, கடுகு, வெந்தயம், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, சியா விதைகள் (Chia seeds), எள், ஆல்ஃப்பால்ஃபா (Alfalfa) எனக் காய்கறி, கீரை, தானியங்கள், விதைகள் எனப் பலவற்றையும் பயன்படுத்தி மைக்ரோ கிரீன்ஸை வளர்க்கலாம்.

சாலட், சூப் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.
சாலட், சூப் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.

தட்டில் மண் அல்லது தேங்காய் நாரைப் பரப்பி, அதன் மேல் தரமான விதைகளைத் தூவ வேண்டும். பிறகு லேசாகத் தண்ணீர் தெளித்து, போதிய சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். சுமார் 4 முதல் 10 நாள்களுக்குள் குட்டிக் குட்டி இலைகளுடன் மைக்ரோகிரீன்ஸ் வளர்ந்துவிடும். அதன் பிறகு அவற்றை வெட்டி எடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எல்லோருமே வீட்டிலேயே இவற்றை எளிதாக வளர்க்க முடியும்.

ஏற்கெனவே சொன்னது போல மைக்ரோ கிரீன்ஸை சமைக்காமல் பச்சையாக (Raw) பயன்படுத்துவதே சிறந்தது. சாலட், சூப் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம். தோசை, அடை, பெசரட்டு போன்றவற்றின் மேல் தூவிச் சாப்பிடலாம். சாண்ட்விச், சட்னி, ஆம்லெட் அல்லது உப்புமாவில் மேலே தூவிச் சாப்பிடலாம். புலாவ், வெரைட்டி ரைஸ் வகைகள், பேல் பூரி மற்றும்  சாலட்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு ஒரு நபர் சுமார் 20 முதல் 40 கிராம் வரை மைக்ரோ கிரீன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இதனைச் சாப்பிட்ட பிறகு வாயுத்தொல்லை அல்லது வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தாமல் இடைவெளி விட்டுப் பயன்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...