Skip to main content

Doctor Vikatan: வேகமாக எடையைக் குறைய உதவுமா Intermittent Fasting... எவ்வளவு இடைவெளி சரியானது?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில்  பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார்.  இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும் சொல்கிறார். 

இன்று நிறைய பேர் இந்த intermittent fasting பற்றிப் பேசுவதைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையிலேயே பலன் தருமா... அதில் எத்தனை மணி நேர இடைவெளி விட வேண்டும்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

விரதம் என்பது காலங்காலமாக நம் மரபில் இருக்கும் விஷயம்தான். ரிஷிகளும் முனிவர்களும் பின்பற்றியதுதான். பாரம்பர்யமாக இருக்கும் விரதத்திலேயே, விரதமிருப்பதற்கு முதல் நாள் இரவு, மிதமான உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது.

அப்போதுதான் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் உண்டு. இப்படி விரதம் குறித்து பாரம்பர்யமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பல அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன.

நம் செல்களில் இருந்து குடலில் சேர்ந்த கழிவானது சாப்பிடாமல் ஓய்வு கொடுக்கும்போது தானாகவே அகற்றப்படுவதாகவும்  ஓய்வே கொடுக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் நம் செல்களில் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும் என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் 16 மணி நேரம், 18 மணி நேரம் என இடைவெளிவிட்டு சாப்பிடுகிற வழக்கம் இருக்கிறது. எடைக்குறைப்புக்காக இந்த டயட் முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள்.

நம் எனர்ஜி உற்பத்தியாகிற மைட்டோகாண்ட்ரியா எனப்படும் செல் புதுப்பிக்கப்பட்டு, எடைக்குறைப்புக்கு மட்டுமன்றி, இளமைத்தோற்றத்துக்கும் எனர்ஜிக்கும் உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் 16 மணி நேரம், 18 மணி நேரம் என இடைவெளிவிட்டு சாப்பிடுகிற வழக்கம் இருக்கிறது.

ஆனால், இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் விரதமுறை எல்லோருக்கும் ஏற்றதா என்றால் அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்து முடிவுசெய்யப்பட வேண்டியது. சிலருக்குத் தினமும் ஒருவேளை சாப்பிட்டாலே நாள் முழுவதும் எனர்ஜியோடு உணர்வார்கள்.

சிலருக்கு 3 வேளை சாப்பாடு தேவைப்படும். சிலருக்கு வாரத்தில் ஒருநாள் விரதமிருந்தால்தான் உடல் லேசானதாகவும் எனர்ஜி கூடுவதாகவும் உணர்வார்கள். சிலருக்குச் சாப்பிடாமல் இருந்தால் எனர்ஜி இருக்காது, கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே, உங்கள் உடலைப் புரிந்துகொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். 

மற்றபடி நோயின்றி வாழவும் என்றும் இளமையோடு காட்சியளிக்கவும்  கலோரி குறைவான, மிதமான உணவுப்பழக்கம் ஆகச் சிறந்த முறை என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் செல்கள் முதுமையடைவது தவிர்க்கப்படும். நீரிழிவு, ரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையோடு இந்த ஃபாஸ்டிங்கைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...