Skip to main content

Doctor Vikatan: AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளுமா?

Doctor Vikatan: ரத்த தானம் பற்றிய பொதுவான தகவல்கள் நிறைய கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு, O பிரிவு கொண்டவர்கள், யாருக்கு வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்கலாம் என்றும் AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளும் என்றும் சொல்கிறார்களே, அது உண்மையா...?

ஒருவருக்குத் தவறுதலாக வேறு வகை ரத்தம் ஏற்றப்பட்டால் அது ஆபத்தில் முடியுமா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.

ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.
ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.

ரத்த வகைகளை ஏ ( A), பி ( B), ஓ ( O) மற்றும் ஆர்ஹெச் (Rh) போன்றவற்றை வைத்து வகைப்படுத்துகிறோம். இந்த ஒவ்வொன்றிலும் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் பிரிவாக இருக்கலாம்.

இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையில் காணப்படும் மற்றொரு ரத்தப் பிரிவு பாம்பே பிளட் குரூப் ( Bombay blood group). 

ரத்த செல்லானது ஏ ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது ஏ குரூப். பி  ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது பி குரூப். ஏ மற்றும் பி  ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது ஏபி குரூப். இரண்டையும் வெளிப்படுத்தாமல் ஹெச் என்ற ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது ஓ குரூப்.

அதையும் வெளிப்படுத்தாதபோது அது பாம்பே குரூப். ஓ வகை ரத்தமும் பாம்பே வகை ரத்தமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் ஓ வகை ரத்தத்தை பாம்பே குரூப் உள்ளவரது உடல் ஏற்காது. அவர்களுக்கு பாம்பே ரத்த வகை உள்ளவர்கள்தான் ரத்தம் கொடுக்க முடியும்.

ஓ பிரிவு உள்ளவர்கள் எல்லோருக்கும் ரத்தம் கொடுக்கலாம், ஏபி பிரிவு உள்ளவர்களுக்கு மற்ற எந்த வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லப்பட்டாலும் அதெல்லாம் இப்போது நடைமுறையில் இல்லை.

எமர்ஜென்சி நேரத்தில் கவனக்குறைவாக  மாற்றிக்கொடுப்பது வேண்டுமானால் நடக்கலாம். மற்றபடி அந்தந்த ரத்தவகையைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ரத்தவகை உள்ளவர்கள் தானம் கொடுப்பதுதான் சரியானது.

தேவை உள்ள ஒருவருக்கு யாரேனும் தானம் கொடுக்காமல் அவருக்கான சிகிச்சையைச் சிறப்பாகச் செய்வது சாத்தியமற்றது.

ரத்தத்தை உற்பத்திசெய்து வங்கியில் சேமித்து வைக்கிற நடைமுறை இன்று இல்லை. தேவை உள்ள ஒருவருக்கு யாரேனும் தானம் கொடுக்காமல் அவருக்கான சிகிச்சையைச் சிறப்பாகச் செய்வது சாத்தியமற்றது. எனவே, ரத்தத்துக்கு மாற்றே கிடையாது. ரத்தமாக ஏற்றும்போதுதான் தேவையை நிறைவேற்ற முடியும். 

ஒருவரது ரத்தப் பிரிவு தெரியாமல் வேறொரு பிரிவு ரத்தம் தவறுதலாக ஏற்றப்படுவதை 'மேஜர் டிரான்ஸ்ஃபியூஷன் ரியாக்ஷன்'  (major transfusion reaction) என்று சொல்வோம். அது சீரியஸான விஷயம்.

சிறுநீரகச் செயலிழப்பு, மூச்சு அடைப்பது, ரத்த அழுத்தம் குறைவது, சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் வெளியேறுவது, குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் போன்றவை வரலாம். 

ரத்தம் ஏற்றும் முன், தானமளித்தவரின் ரத்தப் பிரிவையும் தானம் பெறுபவரின் ரத்தப் பிரிவையும் பார்த்து, பொருந்திப் போனால்தான் ரத்தம் ஏற்றுவார்கள். எனவே, இன்று இதுபோன்ற தவறுகள் நிகழும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...