Skip to main content

'சர்வதேச மகளிர் தினத்தின் ஆணிவேர்' - கிளாரா ஜெட்கின் என்ற நெருப்புப் பெண்ணைப் பற்றித் தெரியுமா?

மார்ச் 8 என்றாலே பூக்களும், பரிசுகளும், ஷாப்பிங் ஆஃபர்களும், வாட்ஸ்அப் வாழ்த்துகளும் பகிரும் தினமாக மகளிர் தினம் மாறிவிட்டது. ஆனால், இந்த நாளின் பின்னணியில் பல தசாப்த காலப் போராட்டமும், ரத்தமும், வியர்வையும் அடங்கியிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் மிக முக்கிய முகம்தான் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் (Clara Zetkin).

கிளாரா ஜெட்கின்
கிளாரா ஜெட்கின்

அது 1910-ம் ஆண்டு. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் இரண்டாவது சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு கூடியிருந்தனர். உழைக்கும் பெண்களின் உரிமைகள் குறித்தும், வாக்குரிமை குறித்தும் காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.

அப்போது, அரங்கத்தில் ஒரு பெண் கம்பீரமாக எழுந்து நின்றார். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த சோசலிசப் போராளியான கிளாரா ஜெட்கின். மேடையேறிய அவர், அரங்கமே அதிரும்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தார்:

"உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தியும், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளை `சர்வதேச மகளிர் தினமாக' (International Women's Day) நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கடைப்பிடிக்க வேண்டும்!"

கிளாரா ஜெட்கின்
கிளாரா ஜெட்கின்

அவரது குரலில் இருந்த தீர்க்கமும், நியாயமும் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது. 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்களும் கைதட்டி அந்தத் தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அப்படி ஒரு பெண்ணின் சிந்தனையில் உதித்த அந்தத் தீப்பொறிதான், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் `சர்வதேச மகளிர் தினம்'.

யார் இந்தக் கிளாரா ஜெட்கின்?

1857-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஜெர்மனியில் பிறந்த கிளாரா, அடிப்படையில் ஒரு ஆசிரியை. இளம் வயதிலேயே தொழிலாளர் இயக்கங்கள் மீதும், பெண்கள் உரிமை மீதும் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. வெறும் மேடைப் பேச்சோடு அவர் நின்றுவிடவில்லை.

`சமத்துவம்' (Die Gleichheit - Equality) என்ற பத்திரிகையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பெண்களை அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்ய அந்தப் பத்திரிகையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பர்க்
கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பர்க்

"பொருளாதார சுதந்திரம் இன்றி பெண்களுக்கு முழுமையான விடுதலை இல்லை" என்பதை ஆணித்தரமாக நம்பினார். ஆண்களுக்கு நிகரான ஊதியம், பேறுகால விடுப்பு, வாக்குரிமை ஆகியவற்றுக்காகச் சமரசமின்றிப் போராடினார்.

மற்றொரு மாபெரும் புரட்சியாளரான ரோசா லக்சம்பர்க்கின் நெருங்கிய தோழி கிளாரா. வரலாற்றில் மிகவும் பிரபலமான நட்பு இவர்களுடையது. இருவரும் இணைந்து முதல் உலகப்போருக்கு எதிராக மாபெரும் பிரசாரங்களை முன்னெடுத்தனர். "போர் என்பது ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வியாபாரம்" என்று துணிச்சலாக முழங்கினர்.

1932-ம் ஆண்டு, ஹிட்லரின் நாசிசம் ஜெர்மனியில் தலைதூக்கிய நேரம். கிளாராவுக்கு அப்போது 75 வயது. வயது முதிர்ச்சியால் கண்பார்வை மங்கி, உடல்நலம் குன்றிய நிலையிலும், ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசத்துக்கும் பாசிசத்துக்கும் எதிராக மிகக் கடுமையான ஒரு உரையை நிகழ்த்தினார்.

பாசிசத்தின் ஆபத்தை முன்கூட்டியே எச்சரித்த முதல் குரல்களில் அவரின் குரலும் ஒன்று. நாசிகளின் அச்சுறுத்தலால் பின் சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர், 1933-ல் தனது 75-வது வயதில் காலமானார்.

கிளாரா ஜெட்கின் சிலை
கிளாரா ஜெட்கின் சிலை

இன்று நாம் சாதாரணமாக அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை, மகப்பேறு விடுப்பு, ஓட்டுப்போடும் உரிமை ஆகியவை எதுவும் சலுகையாக வழங்கப்பட்டவை அல்ல; கிளாரா ஜெட்கின் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகள் தெருவில் இறங்கிப் போராடிப் பெற்றுத் தந்தவை.

எனவே, இந்த மகளிர் தினத்தில் கிளாரா ஜெட்கின் போன்ற ஆளுமைகளை நினைவுகூர்வோம். அவர் கொளுத்திப் போட்ட உரிமைக்கான நெருப்பை, அடுத்த தலைமுறைக்கும் கடத்துவோம்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...