Skip to main content

'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test).

வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும் ஒற்றைக்காலில் நின்று பாருங்களேன் என்பதுதான் இந்த 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'டின் அறிவுறுத்தல்.  

ஃபிளமிங்கோ (Flamingo) என்பது நீண்ட கழுத்தையும், மிக நீண்ட மெல்லிய கால்களையும் கொண்ட  நீர்வாழ் பறவை இனம். தமிழில் இதை 'பூநாரை' என்று சொல்வார்கள். 

இந்தப் பறவைகள் எப்போதும் ஒற்றைக் காலில் நிற்பதை வழக்கமாக வைத்திருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்த டிரெண்டுக்கு 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'  என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

நிலைதடுமாறாமல் அல்லது கீழே விழாமல் ஒரு நபரால் எவ்வளவு நேரம் ஒற்றைக்காலில் நிற்க முடிகிறது என்பதைக் கண்டறியும் இந்த டெஸ்ட்,  ஆரம்பத்தில், விளையாட்டுத்துறையினர் மற்றும் முதியோர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளில்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. 

சமீபகாலமாக மக்கள் மத்தியில் பரவலாகச் செய்துபார்க்கப்படுகிற சுய பரிசோதனையாக இது மாறிவருகிறது. நமது உடலின் பேலன்ஸ், அதாவது சமநிலையைத் தெரிந்துகொள்வதற்கான சோதனை இது. 

நமது உடலும் மூளையும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைக் காட்டும்  அளவுகோல்தான் பேலன்ஸ் அல்லது சமநிலை. செலவே இல்லாமல் சிம்பிளாகச் செய்துபார்க்கிற இந்த  'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'  உண்மையிலேயே சரியானதுதானா... தேவைதானா... எப்படிச் செய்ய வேண்டும்?

சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜிடம் பேசினோம்.

''புதிதாக ஜிம்மில் சேர்வோருக்கு, 'சிங்கிள் லெக் ஸ்டாண்டிங்' (Single Leg standing) என்ற சோதனையைச் செய்வோம். அந்த நபரை குறிப்பிட்ட நொடிகளுக்கு ஒற்றைக்காலில் நிற்கச் சொல்லி, அவரது உடலின் பேலன்ஸ் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். அதுதான் இப்போது வைரலாகிவருகிற  'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'.

ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு, கண்களை மூடியபடி நிற்கச் சொல்லி, அந்த நபரின் எந்தப் பகுதி அதிக ஸ்ட்ராங்காக இருக்கிறது, அவரால் பேலன்ஸ் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்.

ஒருவரது உடலின் சமநிலையைத் தெரிந்துகொள்ளும் இந்த டெஸ்ட் சரியானதுதான்'' என்பவர், உடலின் பேலன்ஸ் ஏன் முக்கியம்,  'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'டை மேற்கொள்வது எப்படி என்பன உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்கிறார். 

மனித உடல்
மனித உடல்

உடலின் சமநிலை (பேலன்ஸ்) ஏன் முக்கியம்?

உடல் சமநிலை என்பது வெறும் கால்களின் வலிமையை மட்டும் பொறுத்தது அல்ல. அது பல உறுப்புகளின் டீம் வொர்க் (Team Work). அதில் நான்கு முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

தசைகள்: உடலைத் தாங்கும் தூண்கள்.

உள் காது: இதுதான் உடலின் 'சென்சார்'. நாம் நேராக இருக்கிறோமா இல்லையா என்று மூளைக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

கண்கள்: தரை மட்டத்தைச் சரியாகக் கணிக்கும்.

மூளை: இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து வேலை செய்யும் மேலாளர் போன்றது.

உங்களால் ஒற்றைக் காலில் சரியாக நிற்க முடியவில்லை என்றால், இந்த டீம் வொர்க்கில் ஏதோ  கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

அதாவது, நீங்கள் தடுமாறி விழுவதற்கான  வாய்ப்பு அதிகரிக்கும். நடை மற்றும் உடல் அசைவுகள் குறையலாம். மூளைத்திறன் குறைபாடு ஏற்பட்டு, ஞாபக மறதி அல்லது சிந்திக்கும் திறன் குறையலாம். இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் பாதிக்கலாம்.

Flamingo balance test
Flamingo balance test

'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்': எப்படிச் செய்ய வேண்டும்?

காலணிகள் அணியாமல் வெறும் கால்களுடன் கண்களை மூடி சமதளமான தரையில் நிற்கவும்.

ஒரு காலை மடக்கியபடி, மற்றொரு காலில் (ஃபிளமிங்கோ பறவை நிற்பது போல) நிற்க வேண்டும். கைகளை மேலே தூக்கியபடியோ, இடுப்பிலோ வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் எவ்வளவு நேரம் ஒற்றைக் காலில் அசையாமல் நிற்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள்.

பேலன்ஸ் இருக்கிறதா?

(இது பொதுவான வரையறைதான். இதை வைத்து பயப்படவோ, கவலைகொள்ளவோ தேவையில்லை. ஆரோக்கியத்துக்கான அலெர்ட்டாக எடுத்துக்கொண்டால் போதும்.

தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையின்றி இவற்றை முயற்சி செய்ய வேண்டாம்)

30 நொடிகள் அல்லது அதற்கு மேல் நிற்க முடிந்தால் உங்களுடைய பேலன்ஸ் வேறு லெவல்.... சூப்பர்!

20 முதல் 29 நிமிடங்கள் நிற்க முடிந்தால்,  சிறப்பு.

10 முதல் 19 நொடிகள் நிற்க முடிந்தால், உங்கள் பேலன்ஸ் சராசரிக்கும் கீழே  இருப்பதாக அர்த்தம். அதை நீங்கள் மேம்படுத்த வேண்டும்.

10 நொடிகளுக்கும் கீழ்தான் நிற்க முடிகிறது, நீங்கள் 40 ப்ளஸ் வயதில் இருக்கிறீர்கள் என்றால் அலெர்ட் ஆக வேண்டும்.

ஸ்குவாட்
ஸ்குவாட்

பேலன்ஸை எப்படி இம்ப்ரூவ் செய்வது?

நாற்காலியில் அமர்ந்து எழுவது போன்ற 'ஸ்குவாட்' (Squats) பயிற்சி, கால்களுக்கு அதிக வலிமை தரும்.  

குப்புறப்படுத்தபடி தரையில் கைகளை ஊன்றி, உடல் முழுவதையும் நேர்க்கோட்டில்  அசையாமல் நிறுத்தி வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தும்  பிளாங்க்  (Plank) பயிற்சிகள் செய்ய வேண்டும். 

கூன் போடாமல் நிற்க, நடக்க, உட்காரப் பழக வேண்டும்'' என விளக்குகிறார் ஷீபா தேவராஜ்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...