Skip to main content

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம் இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்தாலும் பசிக்காவிட்டாலும் காலை உணவைச் சாப்பிட்டே ஆக வேண்டுமா.... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். 

சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

தூங்கி எழுந்த பிறகு சிறிது நேரத்தில் நீங்கள் எதையும் சாப்பிடவில்லை என்றால் உங்கள் வளர்சிதை மாற்றச் செயல்பாடு தாமதமாகும். நீங்கள் சாப்பிடும்வரை, உங்கள் உடலிலுள்ள கொழுப்பு மற்றும் ஆற்றலைப் பாதுகாக்கும்படி மூளைக்கு உடல் தகவல் அனுப்பும். 

ஒருநாளைக்கான மொத்த கலோரி தேவை என்பது நபருக்கு நபர் வேறுபடும். நாள் முழுவதும் கண்ட கண்ட நேரத்துக்குச் சாப்பிடுவது என்ற பழக்கம் தொடரும் பட்சத்தில் அது வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவில் பாதிக்கலாம்.

காலை உணவு அவசியம் சாப்பிட வேண்டுமா, தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட நபரின் வயதையும் தேவையையும் பொறுத்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தையாகவோ, கல்லூரி செல்லும் டீன் ஏஜராகவோ அல்லது கர்ப்பிணியாகவோ இருந்தால் காலை உணவைத் தவிர்ப்பது சரியானதல்ல. வளரும் பருவத்தில் உள்ள இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான தேவைகளுக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். 

மட்டுமன்றி எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளோர், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

சாண்ட்விச்
காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளை சாப்பிடலாம்.

எனவே. காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளைச் சாப்பிடலாம். 

அதுவே ஒரு நபர், எடைக்குறைப்பு முயற்சிக்காக காலை உணவைத் தவிர்க்க நினைக்கிறார் என்றால், அவர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி, அவருக்கேற்ற உணவுமுறையைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.

சிலர் காலையில் நேரமில்லை என்றோ, பசியில்லை என்றோ சாப்பிடுவதைத் தவிர்த்திருப்பார்கள். ஆனால், மதிய உணவுக்கு முன்பே, பசி எடுத்து, நொறுக்குத்தீனிகளைத் தேடிச் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமற்றது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...