Skip to main content

'ஜிம்' ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!

இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் என்றாலும், நேரம் காலம் பார்க்காமல் ஒருவர் தொடர்ந்து ஜிம்மிலேயே கிடக்கிறார் என்றால் அதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

Fitness

"ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல் வைத்திருந்தாலும், தான் மெலிந்து இருப்பதாகவும், கை, கால்களில் தசைகள் 'பல்க்' ஆகத் தெரியவில்லை என்று சிலர் நினைப்பார்கள். இது 'பிகோரெக்ஸியா' (Bigorexia) எனப்படும் மனநலக் குறைாடாக இது இருக்கலாம்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுனில் குமார். இதுபற்றி மேலும் பேசினார்.

"உடல் மசில்ஸில் (தசைகள்) போதுமான அளவு வளர்ச்சி இருந்தாலும், தான் பலவீனமாக இருப்பதாக மனதில் ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும். இன்னும் அதிகமாக தசைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் ஜிம்மிலேயே நேரத்தை செலவழிப்பார்கள்.

'நான் ரொம்ப உயரமா இருக்கேன்', 'உயரம் குறைவா இருக்கேன்', என்பது போல உடல் சார்ந்த குறைந்த சுய மதிப்பீடு (Low Self-Esteem) உள்ளவர்கள், உருவ கேலிக்கு ஆளானவர்கள், ஏற்கெனவே மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பிகோரெக்ஸியா' குறைபாடு ஏற்படலாம். பெரும்பாலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் காணப்படுகிறது. டீன் ஏஜ்ஜிலியேயே இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தென்படலாம். உடலை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் காலகட்டம் அதுதான்.

Low Self-Esteem

பெண்களுக்கும்...

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் தங்கள் உடல் திரட்சியாக (Bulky) இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பெண்களைப் பொறுத்தவரை கட்டுக்கோப்பான உருவமாகவோ, மெலிந்த உருவமாகவோ இருக்க விரும்புவாவர்கள். இப்போதைய ஃபிட்னஸ் கலாசாரத்துக்குள் சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள், உடலின் தசைகள் மீது அதீத ஆர்வமும், அது பற்றியே தொடர்ந்து சிந்தித்து, அதைச் சார்ந்தே வாழ முயற்சிக்கிறார்கள்.

சோஷியல் மீடியா தாக்கம்...

சோஷியல் மீடியாவில் கட்டுக்கோப்பான உடல் அமைப்போடு இருப்பது மாதிரியான போட்டோ, வீடியோக்களை அதிகம் காண முடியும். அதன் மூலம் அப்படியான உடல் அமைப்புதான் 'பெர்ஃபெக்ட்' என்று நிறுவப்படுகிறது. இதை ஒப்பிட்டு பார்த்து சிலருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகும். இதுதவிர, ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகைப்படுத்தி போடும் கன்டென்டுகள், சில நேரங்களில் ஓர் இயல்பான உடலைக்கூட வெறுக்கத்தக்கதாக மாற்றவும் செய்கின்றன.

சோஷியல் மீடியா தாக்கம்

அறிகுறிகள்

'பிகோரெக்ஸியா' பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநாள் ஜிம்முக்கு செல்லவில்லை என்றாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இதனால் டென்ஷனாகவே இருப்பார்கள். உடற்பயிற்சி, ஜிம், அதுபற்றிய வீடியோக்கள் பார்ப்பது என அதைச்சுற்றியே மனமும், நடத்தையும் இருக்கும். இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உடற்பயிற்சி ஆரோக்கியத்தை சிதைக்கும். சிலர் எப்போதும் கண்ணாடியில் உடலைப் பார்த்து சோதனையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இன்னும் சிலர் கண்ணாடியைப் பார்க்கிறதையே வெறுப்பார்கள், பயப்படுவார்கள். இன்னும் சிலர் ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து காயமோ, தசையில் காயமோ ஏற்பட்டால்கூட ஓய்வில்லாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வார்கள். வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல், ஆர்வம் காட்டாமல் ஜிம்மிலேயே கிடப்பார்கள், புரோட்டீன் மட்டும்தான் சாப்பிடுவேன் என்பார்கள், சிலர் தசைகளை அதிகரிக்க ஸ்டீராய்டு கூட பயன்படுத்துவார்கள்.

psychologist Sunil Kumar

கவனிக்காவிட்டால்...

இதுபோன்ற சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மருத்துவர்கள் அல்லது ஆலோசகர்களை அணுக வேண்டும். அவர்களுக்கு காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி, புரிதலை மேம்படுத்தும் ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால், உடற்பயிற்சி சார்ந்த தீவிரமான காயங்கள் ஏற்படலாம், ஸ்டீராய்டு தொடர்ந்து எடுப்பதால் இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படலாம். உடலிலுள்ள ஹார்மோன்கள் சமநிலையை இழக்கலாம். மனரீதியாகப் பார்த்தால் மனச்சோர்வு ஏற்படலாம், குடும்பம், சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடலாம், இன்னும் சிலர் தவறான முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது.

Bigorexia (Representational Image)

உடற்பயிற்சி எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமே தவிர, சுமையாக அழுத்தமாக பதற்றமாக மாறினால், அது மனரீதியான பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டும்" என்கிறார் சுனில் குமார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...