Skip to main content

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.

அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. ஒரே ஆண்டில் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு
புற்றுநோய் பாதிப்பு

1,00,097 பேரில் 53, 542 பெண்கள்... 46,555 ஆண்கள்...

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் அதிகமாவதற்கு காரணம் என்ன, இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவியிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்

இதுத்தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “2020 ஆம் ஆண்டில் இருந்தே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு காலத்தில் ஆயிரங்களில் இருந்த பாதிப்பு தற்போது லட்சத்தை எட்டியிருக்கிறது.

புகைப்பழக்கங்களால் ஆண்கள் வாய்ப் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மார்பாக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஆண்களை விட பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவி
புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவி

காரணம் என்ன?

உடல் பருமன், முறையற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்களால் இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகமாகிறது.

அதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, போதிய உடல் உழைப்பு இல்லாதது, பேலன்ஸ் டயட் எடுத்துகொள்ளாதது, மன அழுத்தம் போன்ற விஷயங்களும் இந்தப் புற்றுநோய் பாதிப்புக்கு ஒருவித காரணங்களாக இருக்கின்றனர்.

இதையெல்லாம் நாம் சரி செய்தாலே புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.

புற்றுநோயில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் பயிற்சி செய்தால் 30 சதவிகிதம் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

தவிர மாசுபாடுகளாலும் புற்றுநோய் பாதிப்பு வருகிறது. அதனைத் தடுக்க அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் புற்றுநோய் இருந்ததே தெரியாமல் மக்கள் உயிரிழந்த சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது ஸ்கிரினிங் (நோய் கண்டறிதல்) அதிகமாக இருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு
புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் கண்டறிதலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அரசாங்கம் நன்றாகவே செயல்படுகிறது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு அரசு காப்பீட்டு திட்டங்கள் பயனளிக்கும் வகையில் இருக்கிறது.

நகர்புறங்களில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு முன்பைவிட அதிகமாக இருக்கிறது. அந்த அளவிலான விழிப்புணர்வை கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...