Skip to main content

Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்!

நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும் என்கிற ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ஆரோக்கியமான நுரையீரலுக்கு சில வழிகாட்டல்களை இங்கே தருகிறார்.

மூச்சுப்பயிற்சி
மூச்சுப்பயிற்சி

நாம் ஓய்வில் இருக்கும்போது சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 12 - 15 முறை மூச்சுவிடுகிறோம். நுரையீரலின் முழுக் கொள்ளளவுக்கு மூச்சை நன்றாக இழுத்து, பொறுமையாகவிட வேண்டும். இதனால், நம் நெஞ்சுக்கூடு நன்றாக விரிவடைவதோடு, நுரையீரல் ஆக்சிஜனை மற்ற பாகங்களுக்கு முழுமையாகக் கடத்த முடியும்.

அதேபோல், தேவையற்ற கார்பன் டை ஆக்ஸைடையும் முழுமையாக வெளியேற்ற இது உதவுகிறது. பொதுவாகவே, மூச்சை ஆழமாக இழுத்து, விடப் பழகிக்கொள்வது நல்லது. தினமும் காலை எழுந்ததும், இரவு படுப்பதற்கு முன்னரும்... சில நிமிடங்கள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் மூச்சை நன்றாக இழுத்து விடும் பயற்சிசெய்வது நுரையீரலையும் உங்கள் மனதையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

நுரைபொங்கப் பாய்ந்துவரும் கடலானாலும் சரி, நீச்சல்குளமானாலும் சரி... நீச்சல் பயிற்சி எப்போதுமே நுரையீரலுக்கு நல்லது. மூக்கின் வழி மூச்சை நன்றாக இழுத்து, வாய் வழியாக விடும்போது ஒளிந்து கிடக்கும் கார்பன் டை ஆக்ஸைடு முழுவதும் வெளியேறும். நீச்சல் தெரியாதவர்களும்கூட நீரில் சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நுரையீரலைப் பலப்படுத்த முடியும்.

கழுத்து மூழ்கும் வரையிலான நீரில் நின்றுகொண்டு சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் வெயிட் லிஃப்ட்டிங் பயிற்சிகளையும் செய்யலாம். டம்பிள்ஸ் அல்லது மெடிசின் பால் போன்ற கனமான ஒரு பொருளை நீரிலிருந்து மேலும், கீழுமாகத் தூக்கி பயிற்சி செய்யும்போது, நெஞ்சுக்கூட்டில் ரத்தம் நிரம்பி, காற்று குறையும். அந்த அழுத்தத்தில் நுரையீரல் தன் முழுத்திறனோடு செயல்படும். நீரில் செய்வதற்கென சில ஹைட்ரோ தெரப்பிகளும் (Hydro Therapy) இருக்கின்றன. இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால், நம்முடைய சுவாச மண்டலம் சிறப்பாகச் செயல்படும்.

நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி

போரில் வெற்றிபெற தளபதி மட்டும் வலுவாக இருந்தால் போதாது. அவனைச் சுற்றி இருக்கும் வீரர்களும் வலிமையானவர்களாக இருத்தல் அவசியம். அதுபோலத்தான், நுரையீரலின் வலிமை, அதைச் சுற்றியுள்ள தசைகளின் வலிமையைப் பொறுத்தே இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 நிமிட நடை என்பது, இதற்கான எளிமையான தீர்வாக இருக்க முடியும்.

“கொஞ்ச தூரம்கூட ஓடவே முடியலை, மூச்சு இப்படி வாங்குது... என்னோட லங்ஸ்ல ஏதோ பெரிய பிரச்னை இருக்கு...” என்று சமயங்களில் நமக்கு நாமே டாக்டர்கள் ஆகிவிடுவோம். ஆனால், இப்படி ஆவதற்கான காரணம் கை, கால்களின் தசைகள் உறுதியாக இல்லாததே. வீண் பழியோ நுரையீரல் மீது. திடீரென ஒருநாள் உடற்பயிற்சி செய்கிறேன் பேர்வழி எனச் செய்யும் போது தசைகள் அதிகப்படியான சுமையைத் தாங்குகின்றன. உடலில் குளூக்கோஸை எனர்ஜியாக மாற்றத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால், அந்தத் தசைகள் லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த லாக்டிக் அமிலம், `உடலுக்குக் காற்று போதவில்லை’ என்ற அபாய மணியை ஒலிக்கச்செய்கிறது. அதன் காரணமாகவே `தஸ்...புஸ்...’ என்று மூச்சு வாங்குகிறது. தொடர் பயிற்சிகளின் மூலம் தசைகளை வலிமைப்படுத்தி, எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தினால், நுரையீரலுக்கு மட்டுமல்ல... உடலின் அனைத்து பாகங்களுக்குமே அது வரமாக இருக்கும்.

வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்!
வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்!

நம் வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவதன் மூலம் நுரையீரலை வலுப்படுத்த முடியும். ஏனெனில், வயிற்றுக்கு சற்று மேல் பகுதியில்தான் `உதரவிதானம்’ எனப்படும் டையஃப்ரம் (Diaphragm) இருக்கிறது. இது மூச்சை இழுத்துவிட உதவிசெய்யும் முக்கியத் தசை. தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒரு கையை வயிற்றிலும், ஒரு கையை நெஞ்சின் மீதும் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஆழமாக இழுத்து, வாய் வழியாக விட வேண்டும். இப்படி செய்யும்போது வயிற்றின் மீதிருக்கும் உங்கள் கை, மார்பின் மீதிருக்கும் கையைவிடவும் உயரமாகச் செல்ல வேண்டும். மூச்சை இழுத்து, சில விநாடிகள் மூச்சைப் பிடித்து நிறுத்துவதும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போது, சிறிது நேரத்திலேயே ஆற்றல் இழந்தவர்களைப்போல உணர்வோம். இதற்கு, நாம் எப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். உடலை வளைத்து உட்காரும்போது, அது நுரையீரலையும் அழுத்தி, காற்றை இழுக்கும் திறனைக் குறைக்கிறது. இதனால், உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் இல்லாததால், சோர்வுநிலை ஏற்படுகிறது. கால்களைத் தரையில் ஊன்றி, 90 டிகிரியில் முதுகை வைத்தபடி, நிமிர்ந்து சரியான பொசிஷனில் உட்கார்ந்து பாருங்கள்... உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் அளவு கிடைப்பதால், புத்துணர்வாக உணர்வீர்கள்.

உட்காரும் விதம்
உட்காரும் விதம்

ட்ரம்பெட், புல்லாங்குழல், சாக்ஸபோன் போன்ற காற்றை அடிப்படையாகக்கொண்ட கருவிகளை வாசிப்பது நுரையீரலை வலுப்படுத்துவதற்கான நல்ல பயிற்சி. பாடல்கள் பாடுவதும் நுரையீரலை வலுப்படுத்தும் ஒரு பயிற்சியே.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...