Skip to main content

Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள்.  ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?,

மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

மயக்கம் என்பது சாதாரணமான அறிகுறி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மயக்கம், தலைச்சுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள், சீரியஸான பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நமக்கு வந்தாலும் சரி, மற்றவர்களிடம் பார்த்தாலும் சரி, சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல.

ஒரு நபருக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். அதாவது ஒருவருக்கு நீரிழிவு இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பவராக இருக்கலாம்.

சில நேரங்களில் அவருடைய ரத்தச் சர்க்கரை அளவுக்கும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துக்கும் சம்பந்தம் இல்லாமல் போய், ரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போகலாம். குறிப்பாக, அது 45 மில்லிகிராமைவிட குறைந்தால் மயக்கம் வந்து விழும் அளவுக்குப் போகலாம்.

மயங்கி விழுந்தவரின் கால் பகுதியை சற்று மேல் உயர்த்தி வைக்கலாம்.

அடுத்தது சிங்கோப்  (Syncope) எனப்படும் பிரச்னையாலும் மயக்கம் வரலாம். இது ரத்த அழுத்தம் குறைவதால் ஏற்படுவது. வழக்கமாக மூளைக்குப் போகக்கூடிய ரத்த ஓட்டம் குறையும்போதோ, ஆக்ஸிஜன் அளவு குறையும்போதோ, மூளைக்குத் தகவல் போய், உடனே மயக்கம் வரலாம்.

அதேபோல சிலருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும் மயக்கம் வரலாம். அதாவது சராசரியைவிட மிக அதிகமாகும்போது மூளையிலுள்ள ரத்தக்குழாய்கள் வெடித்து, சட்டென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திடீர் மயக்கம் வரக்கூடும். காதுக்குள் இருக்கும் பிரச்னை காரணமாக ஏற்படும் வெர்டிகோ பாதிப்பாலும், கழுத்து எலும்பு தேய்மானத்தாலும் கூட சிலருக்கு மயக்கம் வரலாம்.

மயங்கி விழுந்தவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளிப்பது என்பது காலங்காலமாகச் செய்யப்படுகிற ஒன்றுதான். மயக்கத்திலிருப்பவரின் முகத்தில் சில்லென்ற தண்ணீர் படும்போது, ட்ரைஜெமினல் நரம்பு (Trigeminal Nerve) உடனடியாக மூளைக்குத் தகவல் சொல்லி மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அனுப்ப வாய்ப்பு உண்டு.

முதலுதவி

ஆனால், மயக்கம் வந்து விழுந்தவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது என்பது முறையான முதலுதவி கிடையாது. மயங்கி விழுந்தவருக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் பார்க்க வேண்டும். மயங்கி விழுந்தவரின் கால் பகுதியை சற்று மேல் உயர்த்தி வைக்கலாம்.

மயங்கி விழுந்தவரை கவனிக்க ஆளில்லாத பட்சத்தில் அந்த நபர் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பாரா என்பதற்கு உறுதியாக பதிலளிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இறந்துபோனவர்கள் எத்தனையோ பேர் உண்டு, அது மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயம்தான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...