Skip to main content

Health: அம்மை நோய்; அதிக பாதிப்பு யாருக்கு? அறிகுறி, உணவு, சிகிச்சைகள் என்ன? கம்ப்ளீட் தகவல்கள்!

கோடையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் பி.செந்தூர் நம்பி.

அம்மை
அம்மை

''அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது என்ற நம்பிக்கை இன்னமும் நம் சமூகத்தில் சிலரிடம் இருக்கிறது. அம்மை வந்தால் குளிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இது தெய்வ குத்தத்தால் ஏற்படுவது இல்லை... வைரஸ் கிருமியின் வரவால் ஏற்படுகிறது.

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பெரியம்மை நோயால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பெரியம்மைக்குத் தடுப்பூசி வந்த பிறகு அது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த வைரஸ் கிருமியை மிகவும் பாதுகாப்பாக ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர். தற்போது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது சிக்கன்பாக்ஸ் (Chickenpox) எனப்படும் சின்னம்மை. இது ஒரு தொற்றுநோய். யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம்.

அம்மை வந்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.
கோடைக்காலம்

சின்னம்மை வருவதற்கு காரணம் வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella Zoster) என்கிற வைரஸ்தான். இது, காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். கோடைக்காலத்தில் இது பரவுவதற்கான சூழல் உள்ளதால், அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலும், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும்தான் சின்னம்மை வருகிறது. 5 முதல் 10 நாள்கள் வரை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இருமல், சளி, உமிழ்நீர், தும்மல் வழியாக இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அம்மை வந்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

வெரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் உடலுக்குள் புகுந்த 1-3 வாரத்தில் தனது வேலையைக் காட்டும். ரத்தத்தில் வைரஸ் கலந்தவுடன்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக, பலருக்கும் சுவாசம் மூலமாகத்தான் இந்த வைரஸ் முதலில் பரவுகிறது. தீவிரமான காய்ச்சல் இருக்கும். 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும்கூட காய்ச்சல் ஏற்படலாம். இது, தொண்டை, நுரையீரல் மற்றும் தோலில் புண்களை ஏற்படுத்தும். வழக்கமாக முதுகு, வயிறு போன்ற பகுதிகளில் சின்னம்மை புண்கள் ஏற்படும்.

அம்மை
அம்மை

குழந்தைகளைப் பொறுத்தவரை சின்னம்மை வந்தால் பெரும்பாலும் எந்த சிகிச்சையும் தேவைப்படாது. சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், முதியவர்களுக்கு சின்னம்மை சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, சின்னம்மை வந்த முதல் இரண்டு நாள்களுக்குள் மருத்து வரை அணுகி ஆன்டிவைரல் மருந்துகளைச் சாப்பிட்டால், அம்மை நோயின் தீவிரம் குறையும். முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், வெரிசெல்லா வைரஸ் நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வயதானவர்களுக்கு அம்மை நோய் வந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.

பொதுவாக, அம்மை புண்களில் இருந்து நீர் வடியும். சிலருக்கு, இந்த புண்களில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அம்மை நோய் வந்தால் தனி அறையில் இருப்பதுதான் நல்லது. அம்மை காரணமாக உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், குளிர்ச்சி நிறைந்த அறையில், புண்கள் ஆறி உதிரும் வரை இருப்பது சிறந்தது. நமது முன்னோர்கள் வேப்பிலையைப் பரப்பி அதன் மேல் அம்மையால் பாதிக்கப்பட்டவர்களைப் படுக்கவைப்பார்கள். வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்பதால், அம்மைப் புண்களுக்கு மிகவும் நல்லது. ஆனால், சுத்தமாக இல்லாத வேப்பிலையின் மேற்புறத்தில் ஏதாவது கிருமிகள், தொற்றுகள் இருந்தால் அதன் மேல் படுக்கும்போது அம்மைப் புண்கள் பெரிதாகிவிடும் வாய்ப்பும் உண்டு.

இளநீர்
கிராமப்புறங்களில் பலர் அம்மை வந்தால் குளிக்கவிடுவது இல்லை.

அம்மை நோய் ஏற்பட்டால் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், வீட்டில் சுத்தமாகச் சமைத்ததாக இருக்க வேண்டும். உணவில் காரம் மற்றும் எண்ணெய் குறைவாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடலாம். பழச்சாறுகள், உப்புக்கரைசல்கள், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களையும் பப்பாளி, கேரட் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

கிராமப்புறங்களில் பலர் அம்மை வந்தால் குளிக்கவிடுவது இல்லை. இது தவறு. அம்மையால் பாதிக்கப்பட்டவர் தினமும் குளிக்கலாம். சோப் பயன்படுத்தாமல் குளிக்கலாம். நிறைய நாள்கள் குளிக்காமல் இருந்தால், சில நேரங்களில் தொற்றுப் பாதிப்புகளால் நோய் பெரிதாகிவிடும் வாய்ப்பு உண்டு. அம்மை வந்த சமயங்களில் குளிக்காவிட்டாலும் அவசியம் ஈரத்துணியால் உடலைத் துடைக்க வேண்டும்.

குளியல்
குளியல்

சின்னம்மையைப் பொறுத்தவரை பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது. ஓய்வே போதுமானது. ஒரு முறை ஒருவருக்கு சின்னம்மை வந்தால், அதன் பின்னர் அவரது வாழ்நாளில் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், சின்னம்மையை ஏற்படுத்தும் வெரிசில்லா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.

வீட்டில் யாராவது ஒருவருக்கு அம்மை இருந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஒருவருக்கு அம்மை வந்த அடுத்த ஒரு வாரத்தில் இருந்து மூன்று வாரங்களுக்குள் வீட்டில் இருப்பவர்களுக்கும் அம்மை வரலாம். இதைத் தடுக்க வீட்டில் உள்ள மற்றவர்கள் சின்னம்மைக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது சிறந்தது. 18 மாதங்களைக் கடந்த குழந்தைகளாக இருந்தால், ஒரு டோஸ் தடுப்பூசியும், பெரியவர்கள் ஒரு மாத இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள வேண்டும்.

அம்மை வந்தால் ஏற்படும் மிகப்பெரிய சோதனையே தழும்புகள்தான். வேலைக்குச் செல்லும் பலர் அம்மைத் தழும்புகளால் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அம்மைத் தழும்புகள் முற்றிலும் நீங்க ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். அம்மைத் தழும்புகளை நீக்கப் பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. எனவே, முடிந்த வரை அம்மை வராமல் தடுப்பதுதான் சிறந்த வழி.

மம்ப்ஸ் (பொன்னுக்கு வீங்கி)
மம்ப்ஸ் (பொன்னுக்கு வீங்கி)

மம்ப்ஸ் (Mumps) என்பது அம்மையின் இன்னொரு வடிவம். இது, உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கும் வைரஸ். இதனால், தாடையின் ஒரு பகுதி நன்றாக வீங்கிவிடும். மம்ப்ஸ் நோயால் நேரடியாக உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், ஆண்களுக்கு விரை வீக்கம், பெண்களுக்கு சினைமுட்டைப் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு, கணையத்தைப் பாதிக்கும். எனினும், இந்த நோய் குறித்துப் பயப்படத் தேவை இல்லை. ஏனெனில், பெரும்பாலும் தடுப்பூசி மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ருபெல்லா வைரஸ் உடலுக்குள் புகுந்தால் தோல் தடித்துவிடும். அரிப்பு ஏற்படும். கடும் காய்ச்சல் இருக்கும். பொதுவாக, மூன்று நாள்கள்தான் இதன் வீரியம் இருக்கும். அதனால், பயப்படத் தேவை இல்லை. ஆனால், கர்ப்பிணிகளுக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், குழந்தை பாதிக்கப்படும். பிறக்கும் குழந்தைக்குக் கண்கள், காதுகள், இதயம் போன்றவற்றில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். குழந்தையிலேயே ருபெல்லா வைரஸ் தடுப்பூசி போடப்படுவதால், இந்த வைரஸ் தாக்குதல் பெருமளவு குறைந்திருக்கிறது. எனினும், பெண்கள் குழந்தைப்பேறுக்குத் திட்டமிடுவதாக இருந்தால், முன்கூட்டியே ருபெல்லா வைரஸ் தடுப்பூசி போடவில்லை எனில் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

cold and fever

அம்மை வகைகளில் முக்கியமானது தட்டம்மை. மீசில்ஸ் (Measles) வைரஸ் காரணமாகத் தட்டம்மை ஏற்படுகிறது. சின்னம்மையைவிட சற்று அதிகம் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது இந்த தட்டம்மை. மீசில்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் முழுவதும் ஆங்காகே தடிப்புத்தடிப்பாக தோன்றும். தோலில் மணல் போன்று ஒருவித சொறி ஏற்படும்.

தட்டம்மை வந்தால் காய்ச்சலோடு சளி, இருமல் அதிகமாக இருக்கும். கண்கள் சிவந்து காணப்படும். மீசில்ஸ் வைரஸானது மூச்சுக்குழலில் இருக்கும் தோலின் வெளிப்புற அடுக்கை அரித்துவிடும். சில சமயங்களில் இரைப்பையின் சுவர்களையும் அரிக்கும். தட்டம்மைக்கு நேரடி ஆன்டிவைரஸ் மருந்துகளே கிடையாது. பாதிப்பைக் குறைப்பதற்காக வைட்டமின் ஏ மருந்துகள் சாப்பிட வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதம் ஒரு தடுப்பூசியும், 15-18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் தட்டம்மையைத் தடுப்பதற்குப் போடப்படுகிறது. 15-18 மாதங்களில் போடப்படும் தடுப்பூசி எம்.எம்.ஆர் தடுப்பூசி எனப்படும். இது, மீசில்ஸ், மம்ஸ், ருபெல்லா என்ற மூன்று வகையான அம்மையை ஏற்படுத்தும் வைரஸ்களைத் தடுப்பதற்காகப் போடப்படுகிறது. இதுவரை, தட்டம்மைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது'' என்கிறார் மருத்துவர் பி. செந்தூர் நம்பி.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...