தேங்காய் எண்ணெய் என்றாலே அது தலைமுடிக்கானது என்கிறோம். ஆனால் அதைவிட கடுகு எண்ணெய்தான் சிறந்தது என்கிறார் அரோமோதெரபிஸ்ட் கீதா அசோக்.
கடுகு எண்ணெயில் இருக்கிற சல்பரில், காரத்தன்மை குறைவாக இருப்பதால் அது தலைமுடிக்கு நல்ல போஷாக்கு கொடுக்கும்.
கடுகு எண்ணெயை வாரத்துக்கு 2 நாள், அரை மணி நேரம் ஊறவைத்து முடியை அலசி விடலாம்.
கடுகு எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால், தலைமுடி வலுவாகும்; பளபளப்பாகவும் மாறும்.
கடுகு எண்ணெய் சன்ஸ்கிரீன்போல செயல்படும் என்பதால், வெயிலால் முடி பிரவுன் நிறத்தில் மாறுவதை ஒரு திரைபோல மறைக்கும்.
Comments
Post a Comment