ஒரு காலத்தில் எல்லாருடைய வீடுகளிலும் ஒரு முருங்கை மரமாவது இருந்தது. அதனால், நம்முடைய தாத்தா பாட்டி தலைமுறையிலும், நம்முடைய அம்மா, அப்பா தலைமுறையிலும் அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒரு காலத்துக்குப் பிறகு முருங்கைக்கீரை நம்முடைய தட்டில் இருந்து மெள்ள மெள்ள குறைய ஆரம்பித்தது. ஆனால், சமீப காலமாக முருங்கைக்கீரையின் மருத்துவ பலன்கள் பற்றி மருத்துவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால், எல்லோரும் அதை சூப்பர் ஃபுட் ஆக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிலர், முருங்கைக்கீரையை தினமும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சிலர், தினமும் முருங்கைக்கீரைப் பொடியை நீரில் கலந்து குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ சாப்பிடுவது சரிதானா? பதில் சொல்கிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.
’’அந்தக் காலத்தில் வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள்தான் முருங்கைக்கீரையை சமையலில் சேர்ப்பார்கள். ஒருநாள் பொரியல் செய்தால், இன்னொரு நாள் சாம்பாரில் சேர்ப்பார்கள். அல்லது, கேழ்வரகு மாவுடன் சேர்த்து அடையாக சுடுவார்கள்.
இன்றைக்கு, எந்த சூப்பர் மார்க்கெட் போனாலும், முருங்கைக்கீரைப் பொடி கண்ணில் தென்படுகிறது. முருங்கைக்கீரையின் பலன்கள் நன்றாக தெரிந்துவிட்டதால், இந்தக் கீரையை சுத்தம் செய்ய நேரமில்லாத பலரும், அதை பொடியாக சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதையும், சிலர் தினமும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. தினமும் முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ சாப்பிடும்போது, அதில் இருக்கிற இரும்புச்சத்து நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கும். இப்படியே சேர்ந்தால் ஒருகட்டத்துக்கு மேல் நம் உடம்பில் அதிகப்படியான இரும்புச்சத்து சேர ஆரம்பித்து விடும். அளவுக்கு மீறினால், எதுவுமே உடலுக்குக் கெடுதல்தான். இதனால், நம்முடைய செரிமான மண்டலத்தில் தொந்தரவு ஏற்படும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால், முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ வாரத்துக்கு இரண்டு நாள் சாப்பிட்டாலே போதும். இது மற்ற கீரைகளுக்கும் பொருந்தும் என்கிறார்’’ தாரிணி கிருஷ்ணன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Comments
Post a Comment