சினைப்பை நீர்க்கட்டியால் (பிசிஓடி) இன்றைக்கு பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி பீரியட்ஸ் பிரச்னை, குழந்தையின்மை பிரச்னை என பல சங்கடங்களையும் பெண்கள் சந்திக்கிறார்கள். பிசிஓடி பிரச்னை வராமல் தடுக்கும், சித்த மருந்தான 'குமரிப்பக்குவம்' வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என சொல்லித்தருகிறார் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா.
''சோற்றுக்கற்றாழையை, அதன் கசப்புச்சுவையும் வழுவழுப்பும்போக பத்து முறையாவது கழுவ வேண்டும். ஒரு கப் சோற்றுக்கற்றாழை, அதே கப்பில் பாதியளவு பூண்டு இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். ஒரு பல் பூண்டு என மார்க்கெட்டில் கிடைக்கும். இந்தப் பூண்டு கிடைத்தால் நல்லது. கிடைக்கவில்லையென்றால், வழக்கமான பூண்டையே எடுத்துக்கொள்ளலாம். அரைத்த கற்றாழை - பூண்டு விழுதுடன் ஒரு கப் பனங்கருப்பட்டிச் சேர்த்து, அடுப்பில் வைத்து அல்வா பதத்தில் கிளற வேண்டும். சோற்றுக்கற்றாழையில் நீர்ப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், சுருள வதக்க வேண்டும். இதுதான் `குமரிப்பக்குவம்'. ithu ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
காலை உணவுடன் ஒரு டீஸ்பூன், மதிய உணவுடன் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டால், பீரியட்ஸ் நேரத்து வலி படிப்படியாக குறையும். அதிகமான ரத்தப்போக்கும் கட்டுப்படும். பிசிஓடி பிரச்னை வராமலும் தடுக்கும். இது பெண்களுக்கு அருமருந்து. சோற்றுக்கற்றாழை பெண்களுக்கு நல்லது என்று, பலரும் அதை அப்படியே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிட்டால் சளிப்பிடிக்கும். இப்படி குமரிப்பக்குவமாக செய்து சாப்பிட்டால், நான் மேலே சொன்ன அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
குமரிப்பக்குவம் சித்த மருத்துவக்கடைகளிலும் கிடைக்கும். என்றாலும், பாக்கெட் செய்யப்பட்ட உணவுப்பொருள்களில் அது கெட்டுப்போகாமல் இருக்க பிரிசர்வேட்டிவ் சேர்ப்பார்கள் என்பதால், வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே நல்லது. பலனும் முழுமையாக கிடைக்கும்.'' என்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
Comments
Post a Comment