திருமணமான புதிதில் மட்டுமல்ல, வருடங்கள் பல கடந்தாலும் வெளிச்சத்தில் தாம்பத்திய உறவு கொள்ள பல பெண்கள் விரும்புவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.
’’மனிதர்கள் பெரும்பாலும் ஓய்ந்திருக்கும் நேரத்தில் தான் உறவு கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓய்ந்திருக்கும் நேரம் பெரும்பாலும் இரவாகவே இருப்பதால், இருட்டில் உறவு கொள்வதுதான் மனிதர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே இப்போது வரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. வெளிச்சத்தில் உறவு நமக்கு பழக்கம் இல்லாதது முதல் காரணம்.
இரண்டாவது காரணம் கூச்சம். வெளிச்சத்தில் கணவருக்கு தன் உடலை வெளிப்படுத்த பெரும்பாலான பெண்கள் கூச்சப்படுகிறார்கள். விளைவு, விளக்கை அணைத்தால்தான் உறவு என்கிற முடிவில் பல பெண்களும் இருக்கிறார்கள்.
மூன்றாவது காரணம், தங்கள் உடல்பற்றிய குழப்பங்கள். பெண்களுக்கு தன் உடல் குறித்த எண்ணங்கள் ஆண்களைவிட அதிகம். ’தொப்பை இருக்கு’, ’மார்பகங்கள் சின்னதா இருக்கு’, ’மார்பகம் ஒண்ணவிட ஒண்ணு சின்னதா இருக்கு’, ’மார்பு காம்புகளை சுத்தி முடி இருக்கு’, ’மார்பு காம்புகள் உள்ளிழுக்கப்பட்டு இருக்கு’, ’அக்குள் இடுக்கு தொடை இடுக்கு கறுத்திருக்கு...’ இப்படி ஏதோ ஒரு குறைபாடு தனக்கு இருப்பதாக வருத்தப்படும் பெண்கள், வெளிச்சத்தில் உறவுக்கு விரும்புவது இல்லை. ’லைட் ஆஃப் செஞ்சிட்டா நம்ம உடம்புல இருக்கிற குறை கணவருக்குத் தெரியாது. வெளிச்சத்துல செஞ்சா, இது ஏன் இப்படியிருக்குன்னு அவர் கிண்டல் செஞ்சிட்டா’ என்கிற பயம் பல பெண்களிடமும் இருக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கியமான காரணமே இதுதான்.
ஒருசில பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை வெளிச்சத்தில் உறவுகொள்ள சம்மதிப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை பிறந்த பிறகு, ’மார்பகங்கள் தொங்கிப் போச்சு’, ’வயித்துல வரி வரியா இருக்கு’ என்று, மறுக்கத் தொடங்குவார்கள். இது நான்காவது காரணம்.
ஒரு சிலருக்கு, வெளிச்சத்தில் உறவு கொண்டால் சீக்கிரமே கணவருக்கு நாம் போர் அடித்து விடுவோம் என்கிற எண்ணம் இருக்கும். இது, ஐந்தாவது காரணம்.
மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையில் இருக்கிற பெண்களும் வெளிச்சத்தில் உறவு கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏதோ கடமைக்கு உறவு கொள்ளும் அவர்கள், தாம்பத்தியத்தில் இதுபோன்ற புதுப்புது முயற்சிகளுக்கு இணங்க மாட்டார்கள். இது ஆறாவது காரணம். ஆனால், இப்படிப்பட்ட பெண்களின் சதவிகிதம் மிக மிக குறைவுதான். அதனால், வெளிச்சத்தில் உறவு கொள்ள மாட்டேன் என்கிற பெண்கள் எல்லோருக்குமே கணவரை பிடிக்காதுபோல; நம்மை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார் போல என்றெல்லாம் யோசித்து ஆண்கள் குழம்ப வேண்டாம்.’’ என்றார்.
Comments
Post a Comment