Skip to main content

`வியர்வை சகிக்கல’, `அழுக்கு நைட்டி பிடிக்கல’ - கணவன், மனைவி புகார்களும், கட்டிலுக்குத் தீர்வுகளும்!

அலுவலகத்தின் 5வது மாடியின் கண்ணாடியின் வழியாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. குளிரூரட்டப்பட்ட அலுவலகத்தில் இருந்தபடி கொளுத்தும் வெயிலில் சாலையில் பயணிப்போரைப் பார்ப்பது அவனுக்கு முரணாக இருந்தது.

``செல்வா… கேன்டீன் போலாம் வர்றீங்களா?’’ - டீம்மேட் ஒருவர் அழைப்பது கூட காதில் கேட்காதபடிக்கு வேறு ஏதோவொரு சிந்தனையில் இருந்தான் செல்வா. `என்ன இருந்தாலும் நைட்டு அப்டி கிண்டல் பண்ணியிருக்கக் கூடாதோ..? ஆமா அவ மட்டும் என்னவாம்? ஏட்டிக்குப் போட்டியா வாயாடினா இல்ல… இதுக்கு அது சரியா போச்சு’ - தனக்குத்தானே பேசிக்கொண்டே கேன்டீன் கிளம்பினான்.

கீர்த்தி - செல்வா இருவருமே டாம் அண்ட் ஜெர்ரி தம்பதி. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம்..

Lovers

``டேய் மாங்கா... உன்னையெல்லாம் தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டேன். வீட்ல ஒரு வேலை பாக்குறியா? உன்னை நம்பிக் குழந்தை பெத்துக்கிட்டேன்னு வைய்யி… காலத்துக்கும் சமையல்கட்டு தான் எனக்கு. எம்.பி.ஏ படிச்சும் கிச்சன் தாண்டி வெளிய போக முடியல...’’

``உன்னை எவன்டி வேலைக்குப் போக வேணாம்னு சொன்னது? நீ ஒரு பக்கா வடிகட்டுன சோம்பேறி. சாப்ட்டு சாப்டுட்டு தூங்கணும். அப்றம் எப்டி வேலைக்குப் போக டைம் கிடைக்கும்?’’

``ஹேய்…. ஓவரா பேசாதடா… காலைல எழுந்து உனக்கு டிஃபன் ரெடி பண்ணி லஞ்ச் பேக் பண்ணி உன்னை ஆஃபீஸ்க்கு அனுப்புறதே பெரிய டாஸ்க்கா இருக்கு. கூடமாட ஏதாச்சும் ஹெல்ப் பண்றியா நீ? பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு போறத தவிர இந்த வீட்ல சாப்ட்ட தட்டையாவது எடுத்து வைக்கிறீயா?’’

மாறி மாறி சண்டைப் போட்டுக் கொள்வதே இருவரின் பிரதானப் பொழுதுபோக்கு. இப்படி, வழக்கமான டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகள் தாண்டி நேற்றைய சண்டை கொஞ்சம் ஓவராகத்தான் போயிருந்தது.

செல்வாவுக்குப் பிடிக்குமென்று மஷ்ரூம் ஃப்ரை, ஆலூ பரோட்டா, பிரவுனி கேக் என விதவிதமான மெனுவுடன் டின்னர் தயார் செய்து வைத்துக் காத்திருந்தாள் கீர்த்தி. இன்று செல்வா அவளுக்கு புரொப்போஸ் செய்த நாள். அதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு அவனுக்காக சர்ப்ரைஸாக இவ்வளவும் செய்து வைத்திருந்தாள். இரவு 8 மணியைத் தாண்டியும் செல்வா இன்னும் வீட்டுக்கு வரவில்லை.

``டீம்ல எல்லாரும் வெளிய போறோம், ஒரு பார்ட்டி இருக்கு. நீ தூங்கு. வர லேட்டாகும்’’ என செல்வாவிடமிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி வந்திருந்தது. ``இட்ஸ் ஓகே. டின்னர் மட்டும் வீட்ல வந்து சாப்பிடு’’ என்று ரிப்ளை செய்துவிட்டு டிவியில் மூழ்கியிருந்தாள். செல்வா வீட்டுக்கு வந்ததும் ஒரு ஹக், ஒரு கிஸ், அவனுக்குப் பிடித்த பர்ப்பிள் நிற டிஷர்ட் கொடுத்து `ஐ லவ் யூ செல்வா… ‘ என்று சொல்லி, செல்வா புரொப்போஸ் செய்த இந்த நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டுமென்று கீர்த்தி ஆசை ஆசையாக நினைத்து வைத்திருந்தாள். ஆனால், இப்போது அதெல்லாம் புஸ்ஸென்று ஆகிவிட்டதை எண்ணி சோர்வாக இருந்தாள்.

Proposal

``நம்ம ப்ளான் போட்ட மாதிரி இவன் சீக்கிரமா வர்ற மாதிரி இருந்தா, குளிச்சிட்டு ரெடியாகியிருக்கலாம். எப்டியும் இவன் தூங்குன பின்னாடிதான் வருவான் போல. எதுக்கு இன்னொரு முறை குளிச்சிட்டு… வரட்டும் பாத்துப்போம்’’ என டிவி நிகழ்ச்சியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் ரிமோட்டை எடுத்து டிவியை ஆஃப் செய்தாள்.

ஓர் அணைப்பு, ஒரு முத்தம், வழிந்தோடும் ஒரு காதல் கொண்டாட்டம் என நொடிக்கு நொடி என்னவெல்லாம் நடக்கப் போகிறதென கீர்த்தி தன் மனதுக்குள் கட்டி வைத்த கற்பனையெல்லாம் இன்றைக்கு நடக்காது என்பதை எண்ணி கவலையாய் உட்கார்ந்திருந்தாள். நேரம் இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது. தனியாக டின்னர் சாப்பிடப் பிடிக்காமல் சோபாவில் சாய்ந்தபடி படுத்திருந்தாள். தன்னிடமிருந்த இன்னொரு சாவியை வைத்து வாசல் கதவைத் திறந்தபடி மெதுவாக உள்ளே நுழைந்தான் செல்வா. அசந்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

அவனாகவே சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு எழுந்து வந்தாள் கீர்த்தி.``ஹேய்… வந்துட்டியாடா. கை கழுவிட்டு வா. டின்னர் எடுத்து வைக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு தட்டை கொண்டு போய் டைனிங் டேபிளில் வைத்தாள்.

``ஸாரி கீர்த்தி. நான் வெளியவே சாப்டுட்டேன். ஃப்ரெண்ட்ஸ் கம்பள் பண்ணாங்க. உனக்கு சிக்கன் நூடுல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். நானே உன்னை எழுப்பலாம்னு பாத்தா நீயே வந்துட்டே’’ - கையில் தயாராகப் பிரித்து வைத்திருந்த சிக்கன் நூடுல்ஸ் பார்சலை கீர்த்தி வைத்திருந்த தட்டில் பரிமாறினான்.

``அப்போ இந்த ஆலு பரோட்டா, மஷ்ரூம் ஃப்ரை இதையெல்லாம் கீழ கொட்டிரவா?’’ - கோபம் வந்தது கீர்த்திக்கு. ``உன்ன எவன்டி இவ்ளோ சமைக்க சொன்னது?’’ - கீர்த்தி தனக்காக சமைத்திருப்பதைக் கூட ஒரு கணம் நினைக்காமல் செல்வா சட்டென இப்படி கேட்டுவிட்டதால், அதற்கு மேல் எதுவும் பேச விருப்பம் இல்லாமல் கீர்த்தி படுக்கையறைக்குப் போனாள். தலையணையை அணைத்தபடி படுத்திருந்தாள்.

வாங்கி வந்த நூடுல்ஸை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு செல்வாவும் அறைக்கு வந்தான்.

Husband - Wife

``ஹே... ஸாரிடி’’ என்றான்.

``இன்னைக்கு நீ எனக்கு முதன்முதலா புரொப்போஸ் பண்ணின நாள். அத கூட மறந்துட்டேல்ல?’’ - கீர்த்தி சொல்லி முடிக்கும் முன் வேகமாகச் சிரித்தான் செல்வா.

``அதுக்கு…. வருஷா வருஷம் புரொப்போஸ் பண்ணிட்டே இருப்பாங்களா? மொதல்ல... போட்டிருக்குற அழுக்கு நைட்டியை மாத்துடி. கிட்ட வந்தா இருக்குற மூட் கூட போயிடுது.’’

கீர்த்தியை இன்னும் கொஞ்சம் டென்ஷன் ஆக்கலாமென்று செல்வா விளையாட்டாகச் சொன்னான். ஆனால், அது கீர்த்தியை அவன் தேவையில்லாமல் கேலி செய்வதாகவே அவளுக்கு உணர்த்தியது.

``அங்க மட்டும் என்ன வாழுதாம்? உன் பக்கத்துல படுக்கணும்னா மாஸ்க் போட்டுட்டுதான் படுக்கணும். உன்னோட அக்குள் வியர்வை நாத்தத்துக்கு நடுவுல உன்கூட படுக்குறதே பெரிய விஷயம். என்னை கேவலமா பேசுறதுக்கு முன்னாடி முதல்ல நீ சுத்தமா இருக்கியானு பாரு’’ - பதிலுக்கு செல்வாவை சாடினாள் கீர்த்தி.

இருவரின் ஆரம்பக்கட்ட கேலி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சண்டையாக மாறியது. ``இன்னைக்கு உன்கிட்ட நான் விளையாட்டாதான் இதைச் சொன்னேன். ஆனா, யோசிச்சுப் பாரு. கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஒருவாட்டியாவது எனக்குப் பிடிச்ச மாதிரி ரெடியாகி வெயிட் பண்ணி இருக்கியா? தலைகாணிக்கு உறை போட்ட மாதிரி நைட்டினு ஒரு காஸ்ட்யூம். கிச்சன்ல சமைச்சிட்டு அப்டியே அந்த கையை அந்த நைட்டியிலயே துடைப்ப. அந்தக் கறையும் ஸ்மெல்லும நினைச்சாவே பத்திக்கிட்டு எரியும். இவ்ளோ நாளா ஒருமுறையாச்சும் உன்கிட்ட சொல்லி இருக்கேனா? இப்டிதான் எப்பவாச்சும் காமெடியா, நாசூக்கா சொல்ல முடியும். அதுக்கு இவ்ளோ சண்டை போடுறே ’’ - கீர்த்தியைப் பேசவிடாமல் மொத்தமாய்ப் பொரிந்து தள்ளினான்.

``போடா… பேசாத நீ. காமெடிக்கு கூட நான் உன்ன இப்டி பேசுனது இல்ல. இவ்ளோ நாளா இதையெல்லாம் மனசுல வச்சிட்டுதான் என்கூட படுத்துருக்கன்னு நினைக்கும்போதே எனக்கு என்னை நினைச்சா கேவலமா இருக்கு’’ - அழுதுகொண்டே திரும்பிப்படுத்துக் கொண்டாள்.

விடிந்தும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கிச்சனில் லஞ்ச் பேக் தயாராக இருக்கிறதா என்பதைக் கூட பார்க்காமல் செல்வா அலுவலகம் கிளம்பிவிட்டான். துவைக்கப் போட்ட துணிகளில் நேற்று அணிந்திருந்த கறை படிந்த அழுக்கு நைட்டியைப் பார்த்துக் கொண்டே அதை அவசரமாக எடுத்து வாஷுங் மெஷினில் போட்டாள் கீர்த்தி.

சர்ப்ரைஸ் தரலாமென்று வாங்கி வைத்த பர்பிள் டிஷர்ட் பிரிக்கப்படாமலேயே சோபாவில் கிடந்தது. செல்வாவின் காலியான லஞ்ச் பேக் கதவருகே ஓரமாய்க் கிடந்தது. காலையில் எழுந்து இரவு வரை வீட்டு வேலைகள் ஒன்றுவிடாமல் செய்கிறாள் கீர்த்தி. முன்வாசல் ஆரம்பித்து பின்வாசல் வரை அவ்வளவு சுத்தமாக இருக்கும் வீடு. எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரிந்தவளுக்கு, ஆடை சுத்தம் பற்றி செல்வா கிண்டல் செய்தது அவமானமாக இருந்தது. தன் ஆடை சுத்தம் பற்றி பேசுபவன் அவனுடைய உடல் சுத்தம் குறித்து யோசிக்காதது ஏன் என்றும் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தாள்.

வியர்வை | Sweat

`பொண்டாட்டினா புருஷனோட செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ற மர பொம்மையா? இந்த ரெண்டு வருஷத்துல செல்வா ஏன் ஒருமுறை கூட இதையெல்லாம் ஷேர் பண்ணிக்கவே இல்லை? அவன் வீட்டுக்கு வர்றப்ப மட்டும் மல்லிகைப்பூ, புடவைனு மேக்கப் போட்டுக்கிட்டா, ஏதோ அதுக்காகத் தான் கெட்டப் மாத்திட்டு ரெடியா இருக்குற மாதிரி ஆகிடாதா? வீட்ல காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் எப்படி நார்மலா இருக்குறோமோ, நைட்டும் அதேமாதிரி இருந்தா போதும்னு ரொம்ப சிம்பிளா நைட்டியிலேயே இருந்தது ஒரு தப்பா? இவ்ளோ நாளா செல்வா இந்த நைடி வெறுப்போடவேதான் என்கூட இருந்திருக்கானா?’ - கீர்த்தியின் நினைவுகள் எங்கெங்கோ போயின.

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான் செல்வா.கீர்த்தியை அவனால் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அறைக்குள் சென்று சட்டையைக் கழற்றினான். ஆங்கரில் மாட்டும் முன் சட்டையின் அக்குள் பகுதியை நுகர்ந்து பார்த்தான். வியர்வை நாற்றம் பிடிக்காமல் சட்டையை ஆங்கரில் மாட்டாமல் அழுக்குக் கூடைக்குள் வீசி எறிந்தான். கீர்த்தியை நேற்று கிண்டல் செய்தது தவறுதான் என்று அவன் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. செல்வா வந்ததை கவனித்தாலும் அவனிடம் பேச முடியாமல் டிவியில் கண்களை வைத்தபடியிருந்தாள் கீர்த்தி.

ஒரு மணி நேரம் கடந்தும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே, தங்கள் இணையர் உடல், உடை விஷயத்தில் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைத்தாலும், அதை இதுநாள் வரையிலும் பகிர்ந்து கொள்ளாமலே அட்ஜஸ்ட் செய்து கடந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விளையாட்டாகப் பேசி கிண்டல் செய்து கொள்ளும் ஜோடியாக இருந்தாலும், சுத்தம் குறித்த டாபிக் வரும்போது அதை இருவராலும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது, சண்டை பெரிய அளவில் வெடித்த பின்பு தான், தாங்கள் இருவருமே தங்களிடம் உள்ள அழுக்கை மறைத்துவிட்டு ஒருவருக்கொருவர் புகார் செய்து கொண்டதைப் பற்றி பொறுமையாய் யோசித்துப் பார்க்கிறார்கள்.

Couple

இப்போது யார் முதலில் பேசுவது என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுகிறது. பாத்ரூமுக்குள் போய் ஷவரை திறந்துவிட்டுக் குளித்தான் செல்வா. அவன் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பின் வாசம் ஹால் வரை வரவும் கீர்த்திக்கு செல்வா குளித்துக் கொண்டிருப்பது புரிந்தது. இப்போது வரை, கீர்த்தி காலையில் அணிந்திருந்த நைட்டியைத்தான் அணிந்திருக்கிறாள். நேற்றைய சண்டைக்குப் பின் சட்டென நைட்டி அல்லாத வேறு உடைக்கு மாறுவது அவள் ஈகோவை கிளறிப் பார்ப்பது போல் இருந்ததால், நைட்டியை மாற்றாமல் இருந்தாள். ஆனால், ஈகோ கடந்து செல்வா இப்போது முதன்முறையாக இரவில் குளித்துக் கொண்டிருப்பது அவளை என்னவோ செய்தது. அறைக்குள் போனாள். குளித்தத் தலையை துவட்டிக் கொண்டே எதிரில் வந்தான் செல்வா.

``ஏன்... என்னைக் கூப்பிடணும்னு உனக்குத் தோணலைல?’’ - தயங்கித் தயங்கி அவனிடம் பேசினாள்.

செல்வாவுக்கு கீர்த்தி சொல்வது புரியவில்லை. நேராக நிலைக்கண்ணாடியின் முன்பாக நின்று கைகளைத் தூக்கி, குளித்து வந்த ஈரத்தைத் தேய்த்துத் துடைத்துக் கொண்டிருந்தான்.

``என்ன சொன்ன...?’’ - கீர்த்தியைப் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்துக் கேட்டான்.

``இந்த ஈகோவுக்கும் கிண்டலுக்கும் ஒண்ணும் குறைச்சல் இல்ல. குளிக்கப் போனேல்ல.. என்னை ஏன்டா கூப்பிடல?’’ - வாயைக் கோணிக் கொண்டே சத்தமாகக் கேட்டாள்.

ஒரு கணம் உறைந்து நின்றான் செல்வா. ``அடியேய்…. ஒருவாட்டிதான் குளிக்கணும்னு ரூல்ஸ் இல்லடி. இன்னொரு முறை போலாம் வா...’’ - கீர்த்தியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான். கிண்டலும் ஈகோவும் தண்ணீரில் கரையத் தொடங்கியிருந்தன.

Sexual health

தாம்பத்யத்தில் எந்த ஒரு விஷயத்தையும் கிண்டலாகச் சொல்லாமல், அதைப் பக்குவமாக ஆரம்பத்திலேயே எடுத்துச் சொல்லிவிட்டாலே போதும். சிறிய பிரச்னை பெரிய பூகம்பமாக வெடிக்காது என்பதை இருவருமே புரிந்து கொண்டார்கள்.

நெடுநேரமாகியும் கதவு திறக்கவில்லை. பாத்ரூம் ஷவரின் தண்ணீர் துளிகள் கீழே விழும் மெல்லிய சப்தத்துக்கு நடுவில், இருவரும் பயன்படுத்தும் சோப்புகளின் கலவையான வாசம் அறையெங்கும் பரவி நறுமணம் வீசியது.

- ரகசியங்கள் தொடரும்...

- அர்ச்சனா


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...