அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது. டென்னிசி, ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மாநிலங்களில் ஒன்று. இங்கு குடியரசுக் கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சட்டம் இயற்றும் மன்றத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நிபந்தனைகளைப் பின்பற்றி துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. Schoolமுதலையிடம் தப்பித்து... சிறுத்தையிடம் போராடி உயிர்பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!
அந்த மசோதாவில், `துப்பாக்கியை எடுத்துச் செல்பவர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த நபர் பள்ளிகளில் இயங்கும் காவல் அமைப்புகளில் ஆண்டுக்கு ஒருமுறை 40 மணி நேரம் துப்பாக்கியை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் பயிற்சி பெறுவது கட்டாயம். பயிற்சிக்கான செலவுகளை அந்த நபரே ஏற்க வேண்டும்.
அரசு அனுமதியளித்துள்ள சுகாதார வல்லுநர்களிடம் உளவியல் பரிசோதனையை மேற்கொண்டு, பிரச்னைகள் எதுவும் இல்லை எனச் சான்றிதழ் பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது குடியரசுக் கட்சி கவர்னர் பில் லீயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.gunஉடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை, உயிரிழந்த புதுச்சேரி இளைஞர்; பெற்றோர் சொல்வது என்ன?
அமெரிக்காவில் பல்வேறு பள்ளிகள், பொது இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 18 வயது நிரம்பாத 436 குழந்தைகள் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பள்ளிகளுக்குத் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. `குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவைப் போதிப்பதற்குப் பதிலாக ஆயுதத்தை ஏந்துவதா? ஆயுதம் ஏந்திய ஆசிரியர்களின் வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்? schoolMessi: மெஸ்ஸி பெயரைச் சொல்லி உயிர்தப்பிய மூதாட்டி... துப்பாக்கி கொடுத்து செல்ஃபி எடுத்த ஹமாஸ் குழு!
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பயத்துடன் வீட்டில் இருப்பதா?’ என அந்நாட்டு மக்கள் கண்டனங்களைத் தெரிவித்து சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.
`கவர்னர் இந்தச் சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், ரத்தக் கறையை ஏற்படுத்தும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்’ என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
http://dlvr.it/T62pNv

Comments
Post a Comment