பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது. பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.பைடன் - நெதன்யாகு
இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது. தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.
நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இதற்கு முன்னரும் இது போன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் `இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நுட்பமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போர்நிறுத்த நடவடிக்கை தவறானது' என்று கூறி, அந்தத் தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைய வைத்தது. இப்படியிருக்க, அமெரிக்காவின் இந்த விலகல் இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இதனால் விரக்தியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சில நாள்களுக்கு முன்பு, பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலான போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்தது. ஆனால், அப்போது ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோல்வியடைய வைத்தது.
இப்போது, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எதுவும் இடம்பெறாத தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் அல்ஜீரியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து ஆதரித்திருக்கின்றன. ஆனால், இந்தப் புதிய தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீழ்த்தவில்லை. இது, போரின் தொடக்கத்திலிருந்த தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்கா தெளிவாக விலகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தத்தை ஏற்கும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்டாயப்படுத்துவது, ஹமாஸுக்கு நம்பிக்கையளிக்கும். இதனால், பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, தெற்கு காஸா நகரமான ரஃபாவில் திட்டமிட்ட இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய தூதுக்குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இன்னொருபக்கம், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தத் தீர்மானத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.கொல்லப்பட்ட 30,000 பாலஸ்தீனர்கள்... உடலுறுப்பு திருட்டில் இஸ்ரேல்!
http://dlvr.it/T4dMp4

Comments
Post a Comment