சீனாவின் ஹுனான் மாகாணத்தின், பிரபல சிற்றுண்டி நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜாங் யுடொங் (Zhang Yudong). இவரது நிறுவனம் வருடத்துக்கு 600 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,92,66,54,358 மதிப்பிலான பொருள்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், இவருக்கு ஜான்ங் ஜிலோங் (Zhang Zilong) என்ற மகன் இருக்கிறார். அவர் சமீபத்தில் சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, தற்போது சீனாவில் வைரலாகிவருகிறது.சீன யுவான்
அந்தப் பேட்டியில் பேசிய ஜான்ங் ஜிலோங், ``நான் சிறுவயது முதல் அதாவது எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர்கள் என்பதே எனக்குத் தெரியாது. சாதாரண குடியிருப்பில் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில்தான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால், அந்த நிறுவனமும் கடனில் இயங்குவதாக அப்பா தெரிவித்திருந்தார். அதனால், அந்தக் கடன்களையெல்லாம் அடைக்க வேண்டும் எனக் கடுமையாகப் படித்தேன்.
படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தேன். அப்போது மாதம் 6,000 யுவான் சம்பளம் கிடைக்கும். அதை அப்பாவிடம் கொடுத்து கடனை அடைத்துவிடும்படி கூறுவேன். நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அப்பா எங்களின் பொருளாதார நிலை குறித்துத் தெரிவித்தார். அப்பா என்னிடம் எங்கள் சொத்து விவரத்தை மறைத்து பொய் கூறியதால்தான், உழைப்பின் அருமையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகே பெரிய வில்லாவுக்குக் குடிபெயர்ந்தோம்.ஜான்ங் ஜிலோங்
இப்போது நாங்கள் வசிக்கும் வில்லாவின் மதிப்பு மட்டுமே 1.4 மில்லியன் அமெரிக்க டாலர். என் செயல்பாட்டுக்கான நியாயத்தை, உழைப்பைக் கடுமையாக செலுத்தும்போதுதான் என்னிடம் நிறுவனத்தை ஒப்படைப்பேன் என அப்பா கூறிவிட்டார். அதனால், எங்கள் நிறுவனத்தைச் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முயன்றுவருகிறேன்" எனத் தெரிவித்தார். தற்போது இந்தப் பேட்டி சீனாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.சீனா டு பாகிஸ்தான்... அணுஆயுதம், ஏவுகணை தயாரிக்க உதவும் பொருள்கள் - மும்பையில் தடுத்து நிறுத்தம்!
http://dlvr.it/T4fD3J

Comments
Post a Comment