Skip to main content

USA: போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி: ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட அதிகாரி - எழும் கண்டனங்கள்

அமெரிக்காவில் முதுகலை படித்துவந்த இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா (23). ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், Northeastern பல்கலைக்கழக்தில் முதுகலை படிப்பு படித்துவந்தார். இந்த நிலையில், 2023 ஜனவரி 5 அன்று, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை கடந்த திங்களன்று, சியாட்டில் (Seattle) காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழுத் தலைவரிடம், ``அவர் இறந்துவிட்டார். அவருக்கு 26 வயது இருக்கும். 11,000 டாலர் செக் ஒன்றை இவருக்கு எழுதுங்கள். அவருக்கு அவ்வளவுதான் மதிப்பு'' எனக் கேலிசெய்து சிரித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோவிலுள்ள (San Francisco) இந்தியத் துணைத் தூதரகம் மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியது. இந்த நிலையில், தற்போது, விபத்து ஏற்படுத்திய கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரிக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க அரசு அவரை விடுவித்திருக்கிறது.கே.டி.ராமா ராவ்

இது குறித்துப் பேசிய ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினர், ``விபத்து ஏற்படுத்தியவர் விடுவிக்கப்பட்ட செய்தி எங்களுக்கு பேரதிர்ச்சி. எங்கள் மகளின் கொலை வழக்கைப் பற்றி நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோசமான செய்திகளையே பெறுகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.டி.ராமா ராவ்,``அமெரிக்காவின் இந்த முடிவு அவமானமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்திய தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த விஷயம் குறித்து விவாதித்து, மகளை இழந்த குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். வெளி விவகார அமைச்சர் இந்த விவகாரத்தைத் தனது சக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி சுதந்திரமான விசாரணையைக் கோரவும் நான் கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது சோகமானது. ஆனால் அதைவிடச் சோகம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை அலட்சியம் செய்வது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமெரிக்கா: `Please Help Me' - தாக்குதல், ரத்தம் சொட்ட வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர் - என்ன நடந்தது?

இது குறித்து சியாட்டில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பதிவில்,``ஜாஹ்னவி கந்துலாவின் வழக்கு தொடர்பாக அவரின் குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கிவருகிறோம். சரியான தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாக பேசிவருகிறோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம், மேலும் வழக்கின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T3B5WT

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...