மூடிய அறைக்குள், கணவன் - மனைவிக்கு இடையேயான காமத்தில் எந்த எல்லைகளும் கிடையாது என்பது உண்மைதான். அதே நேரம் பரஸ்பரம் எதிர்பார்ப்பில் பரஸ்பர விருப்பமும் இருக்க வேண்டுமல்லவா? இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் (Oral Sex) தம்பதிகளிடையே பிரச்னையாகி விடுகிறது. ஓரல் செக்ஸ் அசிங்கம், தவறு என்றொரு காலம் இருந்தது. இப்போதோ, செக்ஸில் விதவிதமாக ஃபேன்டஸி எதிர்பார்க்கிற தலைமுறையின் காலம். இந்த நிலையில், ஓரல் செக்ஸ் தாம்பத்திய வாழ்க்கையை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதையும், இதைச் செய்யும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் இளம் தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது. இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம்.
''பல காலம் ஒரே துணையுடன் காமம் அனுபவிக்கையில் அலுப்புத் தட்டவே செய்யும். அதனால் வெரைட்டி எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள், குறிப்பாக ஆண்கள். அதிலொன்றுதான் ஓரல் செக்ஸ். உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா கணவர்களே... உங்கள் வாழ்க்கைத்துணையான பெண்ணை உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்குச் சுலபமான, சரியான வழி இந்த ஓரல் செக்ஸ்தான். ஆண்கள் சுலபமாக உச்சகட்டம் அடைந்துவிடுவார்கள். பெண்கள் உச்சகட்டம் அடைவது கடினம். அதை தன் மனைவிக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு செக்ஸ் குறித்த அறிவு நிரம்ப இருக்க வேண்டும்.
ஆணுறுப்பு த்ரீ இன் ஒன் வேலைபார்க்கக் கூடியது. சிறுநீரை வெளியேற்றும்; விந்துவை வெளியேற்றி குழந்தை பெற்றுக்கொள்ள உதவும்; இதன் மூலம் தாம்பத்திய உறவையும் அனுபவிக்கலாம். குறிப்பாக உச்சகட்டத்தை. ஆனால், பெண்ணின் பிறப்புறுப்பில் மேலேயுள்ள மூன்று வேலைகளுக்கும் தனித்தனிப் பகுதிகள் இருக்கின்றன. சிறுநீர் வெளியேறுவதற்குத் தனி வழி, குழந்தைப்பிறப்புக்கு தனி வழி, தவிர, உச்சகட்டம் (Orgasm) அடைவதற்கான க்ளிட்டோரிஸ் என்று தனிப்பகுதியே இருக்கிறது. பெண்ணுறுப்பில் இது சின்னப்பகுதி என்றாலும் உச்சகட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஆணுறுப்புக்குச் சமமானது.
தாம்பத்திய உறவு வைத்துக்கொள்கிறார்கள்; குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்றாலும், பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கவே மாட்டார்கள். காரணம் பெரும்பாலான ஆண்களுக்கு செக்ஸ் பற்றிய சரியான தெளிவு இருப்பதில்லை. அதுபற்றிய சரியான புத்தகங்களை அவர்கள் படிப்பதும் இல்லை. அப்படியே சில ஆண்களுக்குப் பெண்ணின் உச்சகட்டத்துக்கான க்ளிட்டோரிஸ் பற்றி தெரிந்தாலும் 'நான் உச்சகட்டத்தை அடைஞ்சுட்டேன். அவ அடையலைன்னா எனக்கென்ன' என்கிற தவறான மனப்பான்மையுடன் இருந்துவிடுகிறார்கள். சரி, ஓரல் செக்ஸுக்கும் க்ளிட்டோரிஸுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்.
க்ளிட்டோரிஸை கணவர் நாவால் தூண்டினார் என்றால், மனைவிக்கு உச்சகட்டம் கிடைத்துவிடும். ஓரல் செக்ஸில் விருப்பமில்லாதவர்கள் நகமில்லாத சுத்தமான விரல் வைத்தும் செய்யலாம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, ஓரல் செக்ஸ் ஆண்களுக்கு வெரைட்டியில் ஒன்று மட்டுமே.. பெண்களுக்கோ அது உச்சகட்டம் அடைவதற்கான சரியான வழி. இது தெரியாமல்தான் சிலர் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். அதற்கு பதில் தாம்பத்திய உறவில் ஈடுகிற பொசிஷன்களை மாற்றலாம் அல்லது பெட்ரூம், ஹால், ஷவருக்கடியில் என்று இடங்களை மாற்றிக்கொள்ளலாம். அல்லது ஓரல் செக்ஸும் செய்யலாம். வாழ்க்கை முழுக்க ஒரேயொரு துணை என்றாலும் போரடிக்காது'' என்றவர், ஓரல் செக்ஸ் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தார்.
உறவில் ஈடுபடுபவர்களில் ஒருவருக்கு பால்வினை நோய்கள் இருந்தால், அவை மற்றவருக்கும் தொற்றவே செய்யும். அந்த வகையில் வழக்கமான செக்ஸ் செய்யும்போது, என்னென்ன பால்வினை நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதோ அவையனைத்தும் ஓரல் செக்ஸ் செய்யும்போதும் வரலாம். அதே நேரம், ஓரல் செக்ஸ் செய்வதால் வரக்கூடிய பால்வினை நோய்கள் என்று தனியாக எதுவும் இல்லை.
ஓரல் செக்ஸ் பாதுகாப்பு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கருத்தரிக்க முடியாது என்ற வகையில் பாதுகாப்புதான். அதே நேரம் இது கணவன் - மனைவிக்கிடையே நடக்கிறது என்றால் பிரச்னையில்லை. மூன்றாம் நபருடன் ஈடுபட்டு, அவர் வேறு யாருடனாவது உறவு வைத்திருந்தால்... பால்வினை நோய்கள் வாய் மற்றும் முகப்பகுதியில் வந்துவிடலாம். ஹெச்.ஐ.வி வரக்கூடிய வாய்ப்புகூட இருக்கிறது. ஆணுறுப்பில் ஸ்மெக்மா என்றொரு திரவம் சுரக்கும். சுத்தமின்மை, பல உறவுகள் என்று இருந்தால், மிகவும் அரிதாகப் பெண்களின் தொண்டையில் கேன்சர் போன்ற பிரச்னை வரலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்கிற தம்பதிகளிடையே ஓரல் செக்ஸினால் பிரச்னை வராது. அவர்கள் பிறப்புறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டும் போதும்.
பொதுவாக பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்த சோப் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் இரு பாலினருக்குமே சொல்வோம். ஆனால், ஓரல் செக்ஸ் செய்யவிருக்கிறீர்கள் என்றால், பேபி சோப் பயன்படுத்தி உறுப்புகளைச் சுத்தம் செய்வது கட்டாயம். ஓரல் செக்ஸின்போது, கணவன் காண்டம் அணிந்துகொண்டால், மனைவிக்கு நல்லது. அதேபோல், கணவன் தன்னுடைய நாவில் `டங் டம்' (Tonguedom) அணிந்துகொள்ளலாம்.''
Comments
Post a Comment