நம் உடல், மூளையை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறது. மூளையில் இருந்து பெறப்படும் சிக்னலை கொண்டுதான் உடலின் ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்கிறது. அப்படி இருக்க, மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பார்க்கின்சன் - நோய் பின்னணி
நடு நரம்பு மண்டலத்தின் சிதைவுக் கோளாறையே பார்க்கின்சன் நோய் என்றழைக்கிறோம். உடல் இயங்கவும், அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் டோபமைன் நரம்பியக்கடத்திகள் (Neurotransmitter) முக்கிய பங்காற்றுகின்றன. பார்க்கின்சன் நோயானது, டோபமைன் உருவாக்கத்திற்கு காரணமான மூளையின் ‘சப்ஸ்டான்ஷியா நைக்ரா’-வில் இருக்கும் உயிரணுக்களை அழித்து, டோபமைன் உற்பத்தியைக் குறைக்கிறது.
நோயின் தாக்கம்...
பார்க்கின்சன்ஸ் நோய் குறித்து கேட்டபோது, காவேரி மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology) கூறுகையில், ``பாதிக்கப்பட்டவர்களால் எந்த ஒரு பொருளையும் கையில் சரியாகப் பிடிக்க முடியாது, அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டீ கோப்பைகளைக் கூட கைகளில் எளிதாகப் பிடிக்க முடியாமல் போகும். அடிக்கடி மயக்கம் வரும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும். இதுவரை பார்க்கின்சன்ஸ் நோய்க்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் வழங்கவில்லை என்றாலும், மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளாலும், சுற்றுச்சூழல் மாற்றங்களாலும் இந்நோய் வரலாம்” என்று கூறினார்.
நோய் அறிகுறிகள்:
பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். உடல் நடுக்கம், அசாதாரண வேகக் குறைபாடு, நிலையற்ற நடை, உடல் பகுதிகளில் விறைப்புத்தன்மை என உடல்ரீதியாக பல அறிகுறிகள் வெளிப்பட்டாலும், மன ரீதியான பிரச்னைகளும் வரலாம் என்கிறது மருத்துவ உலகம்.
சென்னையில் இலவச மருத்துவ முகாம்!
சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) நோய்க்கான இலவச மருத்துவ முகாம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாமில், காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் பங்கேற்று மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். உடலில் நடுக்கம், உடல் உறுப்புகளில் விறைப்புத்தன்மை, கைகள், விரல்கள், கால்களில் வேகக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் காவேரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாமிற்கு வரலாம்.
உடனே 044 - 4000 6000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனைகளில் நடக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்க்கான இலவச மருத்துவ முகாமில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment