நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தும், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டேவி, நாகர்கோவில் மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி, பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ
இதில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேசும்போது, "குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. குளச்சல் மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்" எனப் பேசினார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது "எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அது தொடர்பாக அலுவலர்களுடன் கலந்துபேசி எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம்கூட வரவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் பேசி 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவந்திருக்கிறார்.
தமிழகத்தில் 708 மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு ஒரு நாளில் 500 மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. இதில் நாகர்கோவில் மாநகருக்கு 10 அறிவிக்கப்பட்டு 5 மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் செவிலியர் கல்லூரிகள் 6-தான் இருந்தன. தற்போது மத்திய அரசிடம் 30 செவிலியர் கல்லூரி கேட்கப்பட்டது. அதில் 11 செவிலியர் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும். தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 478 தேசிய தர உறுதி சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும் 239 கிடைத்திருக்கிறது. 50 சதவிகித சான்றிதழ்கள் இந்த ஆட்சியில் கிடைத்திருக்கின்றன. 239 சான்றிதழ்களில் குமரி மாவட்டத்துக்கு மட்டும் 5 சான்றிதழ் கிடைத்திருக்கின்றன.கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோட்டார் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை கூடிய கட்டடம் இருக்கிறது. ஆனால், 135 உள்நோயாளிகள் இருக்கின்றனர். இதனால் இடப்பற்றாக்குறை இருக்கிறது. அடுத்த நிதி அறிக்கையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனைக்கு மேலும் 100 படுக்கைகளுடன் கூடிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பூர், ஈரோடு உட்பட 5 மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகமிருக்கிறது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கெனவே 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
குளச்சல் அரசு மருத்துவமனையில் பிணவறை இருக்கிறது. மருத்துவர்களும் இருக்கின்றனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ இப்போது என்னுடன் வந்தால் குளச்சல் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்யலாம்" எனப் பதிலடி கொடுத்தார். இதனால் அரசு விழாவில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
http://dlvr.it/SvGR04
http://dlvr.it/SvGR04
Comments
Post a Comment