அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் டால்பினை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அதிக லைக்குகள் கிடைக்குமென ஆசையில் இருந்திருக்கிறார். இதையடுத்து, ஃப்ளோரிடாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமிலியா தீவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. அந்தச் சிறுவன் டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்த, ஓரிரு தினங்களில் டால்பின் உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து, ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.
ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கைபடி, ``புகைப்படத்தில் டால்பின் வீங்கிய நிலையிலும், அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர், புகைப்படம் எடுத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் அல்லது இதற்கு முன்னதாகவே டால்பின் இறக்கும் தறுவாயில் இருந்திருக்கலாம், தண்ணீரைவிட்டு வெளியே இழுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும்.
ஆனால் புகைப்படத்தில் டால்ஃபின் உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது'' எனக் கூறப்படுகிறது. இந்த இளைஞர் டால்பினுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இது குறித்து 19 வயது இளைஞர், ``இது தானாக ஏற்பட்ட விபத்து. கரையிலிருந்து ஒரு டால்பினைப் பிடிப்பது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும்'' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இளைஞரின் இந்தச் செயல் வரவேற்கத்தக்கது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதில் ஒருவர் இளைஞரின் இந்தச் செயல் `இயற்கைக்கு எதிரான குற்றம்' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYMotivation: `அபாயகரமான கடல் பாதை!'- 24 ஆண்டுகள் கப்பல்களுக்கு வழிகாட்டிய டால்பின் - கதையல்ல நிஜம்
http://dlvr.it/SvDXXR
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYMotivation: `அபாயகரமான கடல் பாதை!'- 24 ஆண்டுகள் கப்பல்களுக்கு வழிகாட்டிய டால்பின் - கதையல்ல நிஜம்
http://dlvr.it/SvDXXR
Comments
Post a Comment