தன்னுடைய காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்கு செவிப்பறை சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலர் தினம்ரக்ஷா பந்தன்: ஓட முடியாது ஒளிய முடியாது, மெஹந்தியில் QR Code: அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்!
சீனாவின் காதலர் தினம் ஆகஸ்ட் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரிக்கு அருகில் ஓர் ஆணும் அவரின் காதலியும் உணர்ச்சிவசப்பட்டு அரவணைத்துக்கொண்டனர். 10 நிமிடங்கள்வரை முத்தமிட்டுக் கொண்டனர்.
அதன் பின்னர் இடது காதில் அந்நபருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று, காதில் சத்தம் (bubbling sound) கேட்பதாகவும், சரியாகக் கேட்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவரது செவிப்பறை சேதமடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதோடு குணமடைய இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.காது பிரச்னை!காது கேளாதோரின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள யாரும் இங்கு இல்லை!
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ``உணர்ச்சிவசப்பட்ட நெருக்கம் மற்றும் முத்தம் (smooching) காதுக்குள் விரைவான காற்றழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது பார்ட்னரின் அழுத்தமான சுவாசத்துடன் சேரும்போது, சமநிலையையில் இருந்து விலகி சேதத்தை விளைவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்குச் செவிப்பறை சேதமடைந்து, காது கேட்கும் திறன் குறைந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
http://dlvr.it/SvQMY3
http://dlvr.it/SvQMY3
Comments
Post a Comment