Skip to main content

‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற்றாலும் நல்லதுதான்” - சொல்கிறார் பூவை.ஜெகன் மூர்த்தி

``பா.ஜ.க கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறீர்களே?!” ``மணிப்பூர் சம்பவம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. அதற்காக, நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால்கூட கவலையில்லை. அதேசமயம் உரிமை சார்ந்த பிரச்னைகளைத் தேர்தல் தொடர்புடைய விஷயங்களுடன் ஒப்பிடுவது தவறானது.” மணிப்பூர் “மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், யார் பிரதமராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?” ‘‘தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தவரை, 40 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். மத்தியில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ... அவர்கள் வெற்றிபெறப்போகிறார்கள். மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமராகப் போகிறார். அவ்வளவுதான்.”தேசிய ஜனநாயகக் கூட்டணி Vs I.N.D.I.A ‘‘I.N.D.I.A கூட்டணி குறித்து உங்கள் கருத்தென்ன?” ‘‘I.N.D.I.A கூட்டணியைப் பொறுத்தவரை, அவர்கள் வெற்றிபெறுவதற்கான எண்ணத்தில் புதிய அணியை உருவாக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் வெற்றிபெற்றாலும் நல்லதுதான்.” ‘‘பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?” (சிரிக்கிறார்) ‘‘தாராளமாக வாழ்த்துகிறோம்... மக்கள் மன்றத்தில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பதே முக்கியம். I.N.D.I.A கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் வாழ்த்துகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் தேர்வுசெய்தால் அவர்களுக்கும் வாழ்த்துகள்.”பூவை.ஜெகன் மூர்த்தி ‘‘மணிப்பூர் கலவரம் குறித்துப் பேச மாட்டேன் எனப் பிரதமர் சபதம் எடுத்தார்போல் தெரிகிறதே?” ‘‘மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார், பெண்கள் துன்புறுத்தப்பட்ட வீடியோ தொடர்பாகவும் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். அதேசமயம் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்த வேண்டும்.” ‘‘சமூகநீதி காக்கின்ற இயக்கம் தி.மு.க என்றால் மறுப்பீர்களா?” ‘‘பட்டியல் சமூக மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டம் இருக்கிறது. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறெந்த துறைக்காகவும் எடுக்க மாட்டார்கள். ஆனால் தி.மு.க அரசு, பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை மடைமாற்றி வேறு விஷயங்களுக்காகச் செலவிடுகிறது. சுமார் 1,540 கோடியளவுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்குச் செலவிட்டிருக்கிறார்கள். 2,310 கோடி ரூபாயை பொது விநியோக திட்டத்துக்குச் செலவிட்டிருக்கிறார்கள். இதுதான் தி.மு.க-வின் சமூக நீதியா..?” ‘‘நிதிப் பங்கீடுகளை வைத்து பட்டியல் சமூகத்துக்கு எதிரான இயக்கம் தி.மு.க எனச் சொல்ல முனைவது நியாயமா?” ‘‘பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மடைமாற்றச் செய்வது எந்த விதத்தில் நியாயம். தி.மு.க ஆட்சியில் இது ஒன்றும் முதல்முறையல்ல. கருணாநிதி முதல்வராக இருந்தபோது டி.வி கொள்முதலுக்கும் சமத்துவபுரத்துக்கும் செலவு செய்தார். இதை தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையமே சுட்டிக்காட்டியது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டனர்.’’முதல்வர் ஸ்டாலின் ‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை... வருகிற 2024 தேர்தலிலாவது சீட் கிடைக்குமா?” ‘‘2019-ல் சீட் கிடைக்கவில்லை என்றில்லை... பொருளாதார சூழல் காரணமாகத் தேர்தலில் நிற்க நாங்களே விரும்பவில்லை. இந்த முறை போட்டியிடலாமா... வேண்டாமா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்போம்!”
http://dlvr.it/SszLpM

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...