தங்கம் விலை கடந்த சில தினங்களில் குறைந்துள்ள நிலையில், இன்று அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவின் அடிப்படையில் தங்கம் விலையின் நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. பின்னர் மே மாத இறுதிக்குள் தங்கம் விலை சற்று குறைந்தது. ஜூன் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. அடுத்து ஜூலை மாதத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. எனினும், கடந்த சில தினங்களில் மட்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.பெடரல் ரிசர்வ்டிசிஎஸ் நிறுவனத்துக்கு கிடைத்த சூப்பரான வாய்ப்பு... ஐடி நிறுவன பங்குகள் இனி எப்படியிருக்கும்?
தற்போதைய நிலையில், தங்கம் விலை ஏறுமா, இறங்குமா என்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், இந்தியர்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு உலகம் அறிந்த விஷயம். இந்தியர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கும் மக்கள். தங்கத்தை ஒரு முதலீடாகவும், சொத்தாகவும், அவசர பணத் தேவைக்கு உதவும் பொருளாகவும், அந்தஸ்துக்கான சின்னமாகவும் இந்தியர்கள் பார்க்கின்றனர்.
இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கிறது. தங்கம் வாங்குவோர் அனைவரும் இந்த கூட்டத்தின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த முறையும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆண்டிலேயே குறைந்தபட்சமாக இரண்டு முறையாவது வட்டி விகிதம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே ஃபெடரல் ரிசர்வ் சிக்னல் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் இன்னும் பணவீக்கம் ஃபெடரல் ரிசர்வின் இலக்கு வரம்புக்கு மேல் நீடித்து வருகிறது. எனவே, பணவீக்கத்தை குறைப்பதிலேயே ஃபெடரல் ரிசர்வ் கவனம் செலுத்தி வருகிறது. ஆக, இந்த முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும்.பங்கு சந்தைஷேர்லக் அப்டேட்ஸ்: ராக்கெட் வேகத்தில் அதானி பங்குகள்... 52 வார உச்சத்தில் லார்ஜ்கேப் ஸ்டாக்ஸ்!
பொதுவாக, ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும்போது தங்கம் விலை குறையும். ஆனால், தங்கம் விலை என்பது வட்டி விகிதத்தை மட்டும் பொறுத்து மாறுவதில்லை. பணவீக்கம், பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களும் தங்கம் விலையை தீர்மானிக்கின்றன.
குறிப்பாக பங்குச் சந்தைகள் இறங்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தங்கத்தை தேடி ஓடுகின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குவிகின்றன. எனவே, பங்குச் சந்தைகள் இறக்கத்தால் தங்கம் விலை உயருகிறது.
ஆக, இன்று வட்டி விகிதம் குறித்து ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு, அதற்கு பங்கு சந்தை கொடுக்கும் ரியாக்ஷன் போன்றவற்றின் அடிப்படையில் தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/SsnvLZ
http://dlvr.it/SsnvLZ
Comments
Post a Comment