Skip to main content

மணிப்பூர் சம்பவத்தை வெளிநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன?!

‘உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது’ என்று பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். `மணிப்பூர் பிரச்னையால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் தாழ்ந்திருக்கும் நேரத்தில், யதார்த்த நிலைக்குப் புறம்பாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெண்களை நிர்வாணப்படுத்தி, நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரங்கள் நடைபெறும் தேசத்தை சர்வதேச சமூகம் எப்படிப் பார்க்கும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் வன்முறை பற்றிய விவாதம் இன்றுவரை நடைபெறவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. அவையின் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மணிப்பூர் பிரச்னையைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. மணிப்பூர் உட்பட பிற மாநிலங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்கலாம் என்று ஆளும் பா.ஜ.க கூறுகிறது. அதனால், மணிப்பூர் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றிருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சிறப்புத் தூதர் ஃபியோனா புரூஸ் எம்.பி., மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது, ‘மணிப்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வெளியேறியிருக்கிறார்கள். பள்ளிகளும் சர்ச்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன. இதில், மதம் ஒரு முக்கியக் காரணம்’ என்று அவர் பேசியிருக்கிறார். அந்த விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறை மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து எம்.பி-க்கள் கவலை தெரிவித்தனர். பியரே லரடோரு என்ற எம்.பி பேசியபோது, பிரதமர் மோடியையும், 2014-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க அரசு கடைப்பிடித்துவரும் கொள்கைகளையும் விமர்சித்தார். அவர், ‘அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்கக் கூடாது. ஜனநாயகச் செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அது ஒரு பெரிய ஜனநாயக நாடு. ஆனால், அது சிறந்த ஜனநாயகமாக இருக்க வேண்டும்’ என்றார். ‘மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய கடமை இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு’ என்று ஸ்வென் சிமோன் என்ற எம்.பி பேசினார். ‘இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சுருங்கிவருகிறது’ என்று அல்வினா அலமெட்சா என்ற எம்.பி விமர்சித்தார். அவர், ‘இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பாகுபாடும் வெறுப்பும் அதிகரித்திருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இவற்றையெல்லாம் நேரிலேயே கண்டேன்’ என்றார்.மணிப்பூர் மணிப்பூரில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வன்முறை நடக்கும் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களும், சர்வதேசப் பார்வையாளர்களும் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்... இணைய சேவைக்கான தடை நீக்கப்பட வேண்டும்... சட்டவிரோத ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்’ என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க தயங்குகிறதா பாஜக?! ‘பிரிட்டனின் இந்தச் செயலை ஏற்க முடியாது’ என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான அரிந்தம் பக்சி கூறியிருக்கிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் குறித்தும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் கருத்து தெரிவித்த அரிந்தம் பாக்சி, ‘மணிப்பூர் நிலைமையைச் சரிசெய்யவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிரிட்டன் தனது உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும்’ என்றும் கூறியிருக்கிறார். பிரிட்டன் மட்டுமல்ல, மணிப்பூர் சம்பவத்துக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், ‘கொடூரமானது’, ‘பயங்கரமானது’ என்று அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது.ஜோ பைடன் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பாகச் செயல்பட்டுவரும் அமைப்புகள் மணிப்பூர் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பி.பி.சி., அல்ஜசீரா, தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் மணிப்பூர் வன்முறை குறித்துச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ‘இனக்கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது மணிப்பூர் வீடியோவின் மூலம் தெரியவருகிறது’ என்று பி.பி.சி குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் கொடூர வீடியோ வெளியான பிறகே, மணிப்பூர் வன்முறை குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி வாய் திறந்ததைக் குறிப்பிட்டு, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன!
http://dlvr.it/Ssl3hz

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...