Skip to main content

காங்கிரஸ்: அக்.17-ல் புதிய தலைவர் தேர்தல்... யாருக்கு வாய்ப்பு அதிகம்?! - ஓர் அலசல்

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார். கட்சிக்கு முழுநேர தலைவர் உள்பட உட்கட்சி தேர்தலை நடத்துமாறு குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியது. இதனையடுத்து சோனியா காந்தி, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலக முன்வந்தார். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக்கொண்டதால் பதவியில் நீடித்தார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உட்கட்சி தேர்தலைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரிய குழு அறிவித்தது. வட்டார குழு, மாவட்ட தலைவர், மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு 21-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 7-ஆம் தேதி பாத யாத்திரையைத் தொடங்குகிறது. அதற்கான பணிகளைக் கவனிக்க வேண்டி இருப்பதால், தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான சரியான தேதியை முடிவு செய்ய காரிய கமிட்டி கூட்டம் நேற்று முந்தினம் (ஆகஸ்ட் 28) நடந்தது. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியாகாந்தி, காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா, காங்கிரஸின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கார் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தலைவர் தேர்தலுக்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், அக்டோபர் 17-ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதுசூதன் மிஸ்திரி

இதுகுறித்து காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, “காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் 22-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசிநாள். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்டோபர் 17-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதற்கடுத்து பேசிய கே.சி.வேணுகோபால், “தேர்தல் கால அட்டவணைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதயாத்திரை செல்பவர்கள் ஓட்டுப்போட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று கூறினார்.

கே.சி.வேணுகோபால்

``காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியைக் கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம்” என்று அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே போன்றோருடன் அனைத்து மாநில தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அப்பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அசோக் கெலாட்டை தலைவர் ஆக்க முயற்சி நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அதை அசோக் கெலாட் மறுத்துள்ளார். கபில் சிபல், அஸ்வனி குமார் ஆகியோரை தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தும் விலகிய நிலையில் இந்த தேர்தல் நடக்கிறது.

டாக்டர் செல்லகுமார் எம்.பி

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் டாக்டர் செல்லகுமார் எம்.பி-யைத் தொடர்புகொண்டோம். ``கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மனதில் நேரு குடும்பத்திலிருந்துதான் தலைவர் வர வேண்டும் என்பது எல்லோருடைய ஒருமித்த விருப்பமாக உள்ளது. வாரிசு அரசியல் குறித்து மாற்றுகட்சியினர் விமர்சனம் முன் வைக்கலாம். ஆனால், அடிப்படையில் இருக்கும் உண்மை அவர்களுக்கு புரியாது.

காரணம் என்னவென்றால் இந்தியாவில் இருக்க கூடிய எந்த ஒரு அரசியல் இயக்கமும் இனம், மொழி, மதம், சாதி என ஒரு சாராரை சார்ந்துத்தான் நடத்தியிருக்கும். ஆனால், காங்கிரஸ் என்கிற ஒரு இயக்கம் மட்டும்தான் எல்லா இந்தியர்களையும் ஒன்றிணைத்து, வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக உள்ளது. அதற்கு ஒரு தலைமை என்று வரும் போது, இந்த பாகுபாடு எண்ணங்கள் இல்லாத ஒரு தலைமை தேவைப்படுகிறது. அந்த தலைமை நேரு குடும்பத்திடம் தவிர வேறு எந்த குடும்பத்திலும் கிடையாது. வேறு யாரை முன் நிறுத்தினாலும் ஏதோ ஒரு விதத்தில் பற்றுதல், சார்பு இருக்கும். மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக நரேந்திர மோடியுடன் சமரசம், சமாதான போக்கை கடைபிடிக்கிறார்கள். எனவே சர்வாதிகார ஆட்சி நடத்தும் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்க ராகுல் காந்தி தான் சரியான நபராக இருப்பார்.” என்றார்.

காங்கிரஸில் நடக்கும் குழப்பங்கள், அடுத்த தலைவராக யார் தேர்வானால் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் போன்ற கேள்விகளோடு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியை தொடர்பு கொண்டோம். “ராகுல் தவிர வேறு யார் தலைவராக வந்தாலும் அந்த கட்சி தாக்குப்பிடிக்காது. காங்கிரஸ் ஒற்றுமையாக வைத்திருக்க ராகுலால்தான் முடியும். ராகுல் அல்லாமல், இன்னொருவர் வந்தால் அவர் டம்மியாகத்தான் இருப்பார். எனவே ராகுல் தலைமை பொறுப்பு ஏற்பது காங்கிரஸுக்கு நல்லது.

ரவீந்திரன் துரைசாமி

இன்னும் தயங்கி... தயங்கி... தோற்றுப் போகும்... தோற்றுப் போகும்... என்றிருந்தால், அவர் தலைமை ஏற்றுக் கொள்ளவே காங்கிரஸ் கட்சி இருக்காது. இன்னும் அவர் தலைமை பொறுப்பு ஏற்காத வரை நாளுக்கு, நாள் பின்னடைவு ஏற்படும். இதனால் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வளர்ச்சி அடையும். ராகுலைப் பொறுத்தவரை வெற்றி பெற வாய்ப்புள்ள இடத்தில் நிற்கிறாரே தவிர, வெற்றிக்காக உழைக்கத் தயாராக இல்லை” என்று முடித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கடைசியாகக் கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, ஜிதின் பிரசாதாவை சோனியா காந்தி தோற்கடித்தார். காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் நீடிப்பவர் சோனியா காந்தி. ராகுல் காந்தி பதவி வகித்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரை நீங்கலாக, 1998-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...