Doctor Vikatan: வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால், அது பாம்பு தீண்டிய காய் என்று கிராமங்களில் இன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையானதல்ல. வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மைக்கு உண்மையான அறிவியல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வெயில் அல்லது தண்ணீர் இல்லாத வறட்சியான சூழலில் வளரும் வெள்ளரிக்காய்களில் 'குகுர்பிடேசின்' (Cucurbitacin) எனும் சத்து அதிகரிப்பதுதான். கசப்பான வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. ஆனால், கசப்பான வெள்ளரிக்காய், பலருக்கு வயிறு தொடர்பான உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வாந்தி, ஏப்பம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் உண்டாகலாம். சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து, இரண்டு, மூ...