இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கும் வரை அனைவரும் செல்போனும் கையுமாகவே வாழ்கிறோம். இதனால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவுகளையும், அதிலிருந்து வெளிவரும் வழிமுறைகளையும் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா. Dopamine toxicity காலையில் எழுந்தவுடன் படுக்கையில் இருந்து கால்களை கீழே வைப்பதற்குள், நம் அனைவருடைய கைகளும் முதலில் செல்போனைத்தான் தேடும். இப்படி செல்போனை பார்க்கும்போது மூளையில் ’டோபமைன்’ என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இது ஒரு மகிழ்ச்சி தரும் ஹார்மோன். ’ஒரு நிமிடம்’ என்று போனை பார்க்க ஆரம்பித்தால், நம்மை மறந்து மணிக்கணக்கில் அதிலேயே மூழ்கி இருக்க, செல்போன் பார்க்க ஆரம்பிக்கையில் உற்பத்தியாக ஆரம்பிக்கிற இந்த டோபமைன்தான் முக்கிய காரணம். மசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்... லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்! உண்மையில், டோபமைன் நல்ல ஹார்மோன் தான். நம்மை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். அந்தக் காலத்தில் கஷ்டப்பட்டு படித்து மதிப்பெண் பெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவது போன்றவற்றை ஒரு பரிசாகப் பா...