வை ட்டமின் பி12 குறைபாடுப் பற்றிய விழிப்புணர்வு சமீப வருடங்களாகத்தான் அதிகரித்திருக்கிறது. உடலுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் ஒரு மைக்ரோ சத்து இந்த பி 12. பல உடல் உபாதைகளுக்கு ஆரம்பமாக விளங்குவது வைட்டமின் பி12 குறைபாடே. இந்தக் குறைப்பாட்டை பற்றியும் அவற்றைக் கண்டறியும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு வருவதற்கான காரணங்கள் என்ன? உடலுக்குத் தேவையான வைட்டமின்களை, நாம் பெரும்பாலும் உணவின் மூலமாகவே எடுத்துக்கொள்கிறோம். இவற்றில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க ஒன்று. வைட்டமின் பி12 தானியம் சார்ந்த உணவுகள், முட்டை, மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் ஆகியவற்றில் நிரம்பி காணப்படுகிறது. பெரும்பான்மையான வைட்டமின் பி12 குறைபாடு இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பெரும் அளவில் உட்கொள்ளாமல் இருப்பதாலும், காலை உணவு தவிர்ப்பதாலுமே வருகிறது. வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலும் எந்த வயதினரைப் பாதிக்கிறது? பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் பி12 குறைபாடு அத...