உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக்காயின் பயன்களைப் பட்டியலிட்டார் காஞ்சிபுரம் சித்த மருத்துவர் சந்திரபாபு. ''காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குடல் ஆரோக்கியம் ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் இதில் அதிகம். வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாது உப்புக்களும் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கின்றன. வெள்ளரிச் சாறில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை, ரத்த அழுத்தத்தைச் சீராக...