இப்போதும் அதே உணவுகள்! உளுத்தங்களி ஒரு பெண் பெரிய மனுஷியாகும்போது உளுத்தங்களி, நாட்டுக் கோழி முட்டை, சிவப்பரிசிப் புட்டு என்று சத்தாகக் கொடுத்து உடம்பைத் தேற்றுவதுபோல, மெனோபாஸ் நேரத்திலும் சத்தாக சாப்பிடக் கொடுத்து அவளை பராமரிக்க வேண்டும். ஹார்மோனின் ஆட்டம் மட்டுப்பட... பீர்க்கங்காய் கார அரிசி மற்றும் உளுந்து உணவுகளுடன் வெண்டைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அத்திக்காய், கோவைக்காய் என்று நாட்டுக் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். ஹார்மோனின் ஆட்டம் கொஞ்சம் மட்டுப்படும். கை,கால் வீங்கினால்... சூப் மெனோபாஸ் வருவதற்கு முன்பு கை, கால்கள் வீங்கும். இது மெனோபாஸ்க்கான ஒரு அறிகுறி. இதற்கு, சிறு சிறு குச்சிகளுடன் முருங்கைக்கீரை, சிறு கீரைத் தண்டு, கீரைத் தண்டு, வாழைத்தண்டு ஆகியவற்றை சூப்பாக செய்து குடித்தால், வீக்கங்களில் இருக்கிற நீர் வடியத் தொடங்கும். மாதம் ஒருமுறை அகத்திக்கீரை! பிரண்டை பசலைக்கீரை, மாதம் ஒருமுறை அகத்திக்கீரை, பிரண்டை என்று உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், குறைகிற கால்சியத்தை ஈடுகட்டும். முடக்கற்றான் கீரை கால் வலியைப் போ...