சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் 'ஓஸெம்பிக்' (Ozempic). ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரது உடல் எடை மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த மருந்து, மருத்துவ உலகில் பெரும் புரட்சியையும், கூடவே பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் அடிப்படையில் டைப் 2 நீரிழிவு நோய்க்காக (Type 2 Diabetes) உருவாக்கப்பட்ட இந்த மருந்து, இன்று உலகளாவிய அளவில் 'எடைக்குறைப்பு மந்திரமாக' (Weight-loss miracle) பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் மருந்து எப்படி உடல் எடையைக் குறைக்கிறது... இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன... மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்றி இதைப் பயன்படுத்துவதில் உள்ள விபரீதங்கள் என்னென்ன? எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களைத் தருகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். அதென்ன ஓஸெம்பிக்? ஓஸெம்பிக் என்பது ஒரு மருந்தின் பிராண்ட் பெயர்....