Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்கள் அவசியம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா... மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியோ எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆயுள் முழுக்க அதை நிறுத்த முடியாது, தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். ஒருவரது ரத்தச் சர்க்கரை அளவுக்கேற்பவே நீரிழிவுக்கு மாத்திரைகளையோ, இன்சுலினையோ மருத்துவர்கள் பரிந்துரைப்போம். ரத்தச் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறியிருந்தாலோ, உணவுப்பழக்கம் சரியாக இல்லாவிட்டாலோ, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதுவே உணவுப்பழக்கத்தைச் சரியாகப் பின்பற்றி, உடற்பயிற்சிகள் செய்து, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், அவர்கள் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரை அளவுகளைக் குறைத்துவிடலாம். சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுக்க ஆரம்பித்தால் காலம் முழுக்க தொடர்ந்தாக வேண்டும் எ...