Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை... பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா "பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில் சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும். திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை...